Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்; முதல்வர் அதிரடி அறிவிப்பு!

KANIMOZHI Updated:
பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்; முதல்வர் அதிரடி அறிவிப்பு!Representative Image.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் முழு கரும்பும்  வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்

2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தமிழகத்தில் இருக்கக்கூடிய 2.19 கோடி அரிசி குடும்ப ஆட்டதாரர்களுக்கு அடுத்தாண்டு பொங்கலுக்கு  ஒரு கிலோ பச்சரிசி மறறும் சர்க்கரை உடன் 1,000 ரூபாய் ரொக்க பணம் வழங்கடுமென தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பிடிக்காதது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விவசாயிகளும் விளைவித்த கரும்பு வீணாவதாக கூறினர். 

இந்நிலையில் தலைமை செயலகத்தில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரும்பு வழங்குவது குறித்த ஆலோசனை நடந்தது, இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பெருயகருப்பன், சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர், இந்த கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விவசாயிகள் கோரிக்கை நியாமாக உள்ளது. பொங்கலுக்கு முழு கரும்பு வழங்கலாம் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கபட உள்ளது. 2ம் தேதி முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்கி துவக்கி வைக்க இருந்த நிகழ்ச்சி 9ம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்