Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

President election 2022 : குடியரசுத் தலைவர் வேட்பாளர் இவர் தான்.. எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Sekar June 21, 2022 & 16:28 [IST]
President election 2022 : குடியரசுத் தலைவர் வேட்பாளர் இவர் தான்.. எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!Representative Image.

President election 2022 : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ராஷ்டிரபதி யார் என்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் தாங்கள் போட்டியிட கிடைத்த வாய்ப்பை நிராகரித்த நிலையில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் எதிர்க்கட்சியினர் தனக்கு கொடுத்த வாய்ப்பை நிராகரித்தார். 

ஆனால் இன்று எதிர்கட்சிகளின் சந்திப்புக்கு முன்னதாக ஒரு புதிய பெயர் அடிபட ஆரம்பித்தது. அதுவும் முன்னாள் பாஜககாரர் யஷ்வந்த் சின்ஹாவின் ட்வீட் மூலம் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் இன்று காலை ட்வீட் செய்துள்ளார். அதில், “திரிணாமுல் காங்கிரஸில் எனக்கு அளித்த மரியாதை மற்றும் கௌரவத்திற்காக மம்தாஜிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி அதிக எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் எனது இந்த நடவடிக்கையை ஆமோதிப்பார் என்று நான் நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், யஷ்வந்த் சின்ஹாவை எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக அறிவித்ததோடு, ஆளும் தரப்பும் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் குடியரசுத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே பாஜகவின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், பாஜக சார்வில் யாரை நிறுத்துவது என்பதும் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்