Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Rajiv Gandhi Murder Case: ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை..முடிவுக்கு வந்த சிறைவாசம்..

Nandhinipriya Ganeshan November 11, 2022 & 14:01 [IST]
Rajiv Gandhi Murder Case: ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை..முடிவுக்கு வந்த சிறைவாசம்..Representative Image.

தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன், நளினி, ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஜெயக்குமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற 6 பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ரவிச்சந்திரன், நளினி, ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்