Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் ரிஸார்ட் அரசியல்.. ஆனால் இது ஆளும் கட்சியில்.. பாஜகவின் ஸ்கெட்ச்சா?

Sekar June 21, 2022 & 12:33 [IST]
மீண்டும் ரிஸார்ட் அரசியல்.. ஆனால் இது ஆளும் கட்சியில்.. பாஜகவின் ஸ்கெட்ச்சா?Representative Image.

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, நேற்று நடந்த சட்ட மேலவைத் தேர்தலுக்குப் பிறகு, கட்சிக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தலைமறைவாகிவிட்டார். சில சிவசேனா எம்.எல்.ஏக்கள் மேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் சிவசேனாவை ஆட்டம் காண வைத்துள்ளது.

"காணாமல் போன" சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஷிண்டேவுடன் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் சூரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று பிற்பகல் 2 மணியளவில் ஷிண்டே சூரத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷிண்டேவுக்கு மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா மற்றும் விதர்பாவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக மகாராஷ்டிரா சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக 5 இடங்களிலும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. 10 எம்எல்சி இடங்களுக்கு பாஜக ஐந்து வேட்பாளர்களையும், எம்விஏ ஆறு வேட்பாளர்களையும் நிறுத்தியது. சட்டசபையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதிலும், தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, பாஜகவின் வெற்றி வேட்பாளர் பிரவின் தரேகர், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மகாராஷ்டிரா பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது. சிவசேனா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே 100% கிராஸ் வோட்டிங் நடந்தன. இல்லாவிட்டால் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்க மாட்டோம்." என்றார்.

எம்எல்சி தேர்தலில் கிராஸ் வோட்டிங் நடந்ததாக சந்தேகம் எழுந்ததையடுத்து, மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டத்தை இன்று நண்பகல் கூட்டினார். கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுமார் 20 எம்எல்ஏக்கள் கிராஸ் வோட்டிங் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மும்பையில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், இது பாஜகவின் சதி என குற்றம் சாட்டியதோடு, மகாராஷ்டிராவில் இந்த சதி எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவசரமாக டெல்லி கிளம்பியுள்ளதாக பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்