Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“எவன் எப்படி பேசினாலும் கவலை இல்ல” - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆர்.எஸ். பாரதி! 

KANIMOZHI Updated:
“எவன் எப்படி பேசினாலும் கவலை இல்ல” - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆர்.எஸ். பாரதி! Representative Image.

தலைமுறை தலைமுறையாக வாரிசு, வாரிசாக கட்சியில் இருப்பவர்கள் நாங்கள், எவன் எப்படி பேசினாலும் கவலை இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்து காட்டிய பெருமை உதயநிதியையே சேரும், அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் இறையன்பன் குத்தூஸ் இசை பயணத்தின் மணிவிழா மற்றும் வி.எஸ்.என் காதர் அலி இயற்றிய கழகப் பாடல் வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த  நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை விளக்கும் விதமாக வி.எஸ்.என் காதர் அலி இயற்றிய உதயநிதி எங்கள் உதயநிதி என்ற பாடல் வெளியிடப்பட்டது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வாரிசு வாரிசாக கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் யார் எப்படி பேசினாலும் கவலை இல்லை. கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல அரசியலிலும் வாரிசுகள் வருவதில் தவறில்லை. உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்து காட்டிய பெருமை உதயநிதியையே சேரும். 

எனவே அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
 எனத் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்