Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலி!

Surya Updated:
உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலி!Representative Image.

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 475 நாட்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கின்றது. ரஷ்ய ஆக்கிரமித்த பகுதிகளில் மீட்பதற்காக உக்ரைன் தீர்மானம் எடுத்திருக்கின்றது. மேற்கத்திய நாடுகளோடு கூட்டிச் சேர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஏழு கிராமங்கள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா அரசு ஏவுகணை தாக்குதலையும் நடத்தியுள்ளது. உக்ரைனில் மையப் பகுதியில் இருக்கக்கூடிய கிருவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதலானது.

இதுவரை இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது 5 மாடிக் கட்டிடத்தைத் தாக்கியுள்ளது. அதற்குப் பிறகு அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தற்போது அந்த ஈடுபாடுகளில் பொதுமக்கள் சிக்கி உள்ளதாகவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து பல்வேறு நாடுகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் பல உயிர்கள் பலியாகி உள்ளன.

இதுகுறித்து பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தாலும், போர் நிற்காமல் நடந்து வருகின்றன. 16 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில், இந்த முறை ஏவுகணை மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பு தாக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதி பகுதி தாக்கப்பட்ட படங்களை ஜெலன்சி வெளியிட்டுள்ளார். மேலும் இது பயங்கரவாத ஏவுகணைகள், ரஷ்ய நாட்டின் கொலைகாரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராகப் போரைத் தொடர்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்