Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை ஆனால்... ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தர் பல்டி! 

KANIMOZHI Updated:
ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை ஆனால்... ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தர் பல்டி! Representative Image.

ஒன்றியம் என்பது உயர்ந்த படிநிலை வார்த்தைதான் நான் கூட யூனியன் கவர்மெண்ட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன் ஆனால் இங்கு தமிழ்நாட்டில் அது வேறு விதமாக மொழி பெயர்க்கபட்டு அரசியல் ரீதியான பயன்படுத்தப்பட்டு வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

 

இந்திய குடிமைப் பணிகளில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஆளுநர் தரப்பில்  எண்ணித் துணிக என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்களுடன்  ஆளுநர் கலந்துரையாடினார். 

 

அப்போது பேசிய அவர்: ஒன்றியம் என்பது உயர்ந்த படிநிலை வார்த்தைதான் நான் கூட யூனியன் கவர்மெண்ட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன் ஆனால் இங்கு தமிழ்நாட்டில் அது வேறு விதமாக மொழி பெயர்க்கபட்டு அரசியல் ரீதியா  பயன்படுத்தப்பட்டு வருகிறது எனபதுதான் சிக்கல்  என்றார்.

 

இந்தி திணிப்பு பற்றி மாணவர் கேட்ட கேள்விக்கு இந்தியாவில் அதிக மக்கள் இந்தியை பேசுவதால் இந்தி கற்றுக்கொள்வது உதவியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இரு மொழிகொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் வேறு ஒரு பிராந்திய மொழியை படித்தால் நான்றா இருக்கும் என்றுதான் சொல்கிறேன் அது இந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனத் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்