Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

அமைச்சர் திடீர் ராஜினாமா.. யோகி அமைச்சரவையில் சலசலப்பு!! பின்னணி என்ன..?

Sekar July 20, 2022 & 13:22 [IST]
அமைச்சர் திடீர் ராஜினாமா.. யோகி அமைச்சரவையில் சலசலப்பு!! பின்னணி என்ன..?Representative Image.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் இருந்து ஜல் சக்தி துறை இணை அமைச்சர் தினேஷ் காடிக் ராஜினாமா செய்துள்ளார்.

தினேஷ் காடிக் இணையமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் எந்த வேலையும் ஒதுக்கப்படாததால் ஏற்கனவே விரக்தியில் இருந்த அவர், தன்னை கலந்தாலோசிக்காமல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ததால் அதிருப்தியடைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இதே போல் யோகி அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்ஹசர் ஜிதின் பிரசாதாவும் தனது சிறப்புப் பணி அதிகாரியை தன்னிடம் கலந்தாலோசிக்காமல் நீக்கியதால் யோகி அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரும் ராஜினாமாவை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொதுப்பணித் துறையின் துறைத் தலைவர் உட்பட 5 மூத்த அதிகாரிகளை பணியிட மாறுதலில் முறைகேட்டில் ஈடுபட்டதால் உத்தரப் பிரதேச அரசு நேற்று சஸ்பெண்ட் செய்தது. மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதாவின் சிறப்பு பணி அதிகாரி அனில் குமார் பாண்டே மீது ஜூலை 18ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பொதுப்பணித்துறையின் பணியிடமாற்றத்தில் நடந்துள்ள கடுமையான முறைகேடுகளை உடனடியாக கவனத்தில் கொண்டு, ஊழலுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின்படி மேற்கண்ட நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்