Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

7 மாத கர்பிணி மனைவியுடன்...செல்பீ எடுக்க மலை உச்சிக்கு போய்...தள்ளி கொன்ற கணவன்...காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!

Priyanka Hochumin [IST]
7 மாத கர்பிணி மனைவியுடன்...செல்பீ எடுக்க மலை உச்சிக்கு போய்...தள்ளி கொன்ற கணவன்...காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!Representative Image.

துருக்கியில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியை 1000 அடி மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்த கணவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

துருக்கியில், ஹக்கன் அய்சல் (Hakan Aysal) என்பவர், தன்னுடைய மனைவி செம்ரா அய்சலுடன் (Semra Aysal) 1000 அடி உயரம் மலையுச்சியில் செல்ஃபி எடுக்க அழைத்துச் சென்றுள்ளார். பிறகு செல்ஃபி எடுத்த அடுத்த கணமே அவரை கீழே தள்ளி கொலை செய்ததால், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் குற்றமும் பின்னணியும் என்ன என்று தெரிய வந்ததும் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

7 மாத கர்பிணி மனைவியுடன்...செல்பீ எடுக்க மலை உச்சிக்கு போய்...தள்ளி கொன்ற கணவன்...காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!Representative Image

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹக்கன் அய்சல் தன்னுடைய மனைவி செம்ரா அய்சலை துருக்கி மாகாணம் முக்லாவிலுள்ள (Mugla) பட்டர்ஃபிளை பள்ளத்தாக்குக்கு (Butterfly Valley) அழைத்துச் சென்றுள்ளார். அப்போது செம்ரா 7 மாதம் கர்பம், எனவே மலையுச்சிக்குச் செல்ல பயந்துள்ளார். ஆனால் ஹக்கன் அவரை சமாதானப்படுத்தி 304 மீட்டர் உச்சிக்கு அழைத்துச்சென்று, செல்பீ எடுத்த பின்பு யாரும் பார்க்காத நேரத்தில் அவரை கீழே தள்ளி கொலை செய்துள்ளார். இவர் இறந்து சில நாட்களில், ஹக்கன் நீதிமன்றத்தில் செம்ரா பெயரில் இருக்கும் 25,000 டாலர் இன்சூரன்ஸ் பணத்தை கோரியுள்ளார்.

7 மாத கர்பிணி மனைவியுடன்...செல்பீ எடுக்க மலை உச்சிக்கு போய்...தள்ளி கொன்ற கணவன்...காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!Representative Image

சந்தேகத்தின் அடிப்படையில் ஃபெதியே (Fethiye) உயர் குற்றவியல் நீதிமன்றம், அவரின் மனுவை நிராகரித்தது. மேலும் விசாரணை நடத்திய போது, செம்ராவின் மூத்த சகோதரர் நைம் யோல்கு (Naim Yolcu), ``நாங்கள் செம்ராவின் உடலைப்பெற தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்றபோது, ​​​​ஹக்கன் காரில் அமர்ந்திருந்தார். நானும் என்னுடைய குடும்பமும் சோகத்தில் மூழ்கியிருந்தோம். ஆனால் ஹக்கன் சோகமாக கூட தோன்றவில்லை" எனக் கூறியதாகப் பத்திரிகையில் செய்தி வெளியானது சம்தெப்காதை மேலும் அதிகரித்தது. பிறகு விசாரணையில் தெரிய வந்த உண்மை, செம்ராவின் லைஃப் இன்சூரன்ஸ் பணத்துக்காகவே ஹக்கன் அவரை மலையிலிருந்து தள்ளிக் கொலைசெய்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கப்படுகிறது. எனவே, நீதிமன்றத்தில் ஹக்கனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்