Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..! காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in Tamil

Mugunthan Velumani Updated:
காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..!  காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in TamilRepresentative Image.

உலகத்தில் வாழும் மனிதர்கள் அடுத்த கட்ட  பரிணாம வளர்ச்சிக்கு  செல்ல உதவிய உணர்ச்சிகளில் காதலுக்கு என்று தனி இடம் உண்டு.  மனிதன் தனது இளமை பருவத்தில் ஆரம்பித்து முதுமை பருவம் அடைந்து வாழ்க்கையின் இறுதி நிலை வரை காதலிக்க தவறியதில்லை, காலத்திற்கு ஏற்றவாறும் வயதுக்கு ஏற்றவாறும் காதலின்  தன்மை மாறுபடும். இந்த அழகிய காதலை சிறப்பு படுத்தும்  வகையில் தான் காதலர் தினம் என்ற நாளை நிறுவி ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.

காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..!  காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in TamilRepresentative Image

ஆதி காலம் முதலே உள்ள  காதல் :

இந்த பரந்து விரிந்த உலகத்தில் ஆதி காலம் முதலே காதல் என்ற ஒரு உன்னதமான உணர்வு நிலை பெற்று ஆழமாக வேரூன்றி வளர தொடங்கியது என்று தான் கூற வேண்டும். மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளை கருத்துக்களை பரிமாறி கொள்ள மொழி என்ற ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்த பின்பு தான் காதல் என்ற வார்த்தை பிறந்திருக்கும் ஆனால் காதல் என்ற உணர்வு  அன்பின் வெளிப்பாடு  என்று எப்படி வேணாலும் கூறலாம் அது மனிதன் அவதரித்த போது அவனுடனே அவதரித்தது என்று கூறினால் மிகையில்லை.

காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..!  காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in TamilRepresentative Image

காதல் ஒரு உன்னதமான உணர்வு

காதல் வயப்பட்ட இரு மனங்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் இணைய காலதாமதம் ஆனாலும் தங்கள் காதலின் மேல் உள்ள நம்பிக்கையில் கலங்காமல் இறுதி வரை காத்திருப்பார்கள், ராமாயண புராணத்தில் தனது காதலை மனதில் வைத்து  ராமனுக்காக சீதா காத்திருந்த தருணம் ஒரு பொருத்தமான உதாரணம் ஆகும்.தனது காதலை மனதில் வைத்து காத்திருக்கும்  ஒவ்வொரு வரும் ஒரு  உன்னதமான உணர்வில் தான்  பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..!  காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in TamilRepresentative Image

காதல் நினைவில் காலமெல்லாம்

காதல் உணர்வில் கலந்து பழகிய இரு மனங்கள் இணைய முடியாத தருணத்திலும், பிரிவிலும் காதலித்த அழகிய நினைவுகளை நினைத்து கொண்டு காலமெல்லாம் வாழ்வதும் ஒரு சுகமான உணர்வு தான், இந்த உலகத்தில் தோன்றும்  அனைத்து காதலும் இறுதியில் இணைந்தால் தான் உன்னதமானது என்று அர்த்தமில்லை காதல் என்றாலே உன்னதான ஒன்று தான் என்பது உலகத்து உயிர்கள் அணைத்து ஏற்றுக்கொள்ளும் கருத்து என்று கூறுவதில் ஐயமில்லை.

காதலை உணர்ந்து கொண்டால் என்றும் காதலர் தினம் தான்..!  காலமெல்லாம் காதல் வாழ்க..! | Unknown Facts about Valentine's Day in TamilRepresentative Image

உண்மைக் காதல்

இந்த காலத்தில் காதல் என்பது விளையாட்டு போல மாறிவிட்டது இன்றைய தலைமுறையில் உண்மையான காதல் என்று எதுவும் இல்லை என்ற கருத்து பொதுவாக வலம் வருகிறது, அதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது காதல் என்பது எந்த காலத்திலும் மாறாது என்பது தான் உண்மை, காலங்கள் மாறினாலும் காதல் மாறாது என்று கூறினால் மிகையில்லை. காதல் என்ற ஒரு உணர்விற்கு தான் எந்த வேறுபாடும் தெரியாது என்பதை அனைவருக்கும் உணர்ந்தாலே ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான் என்பது உறுதி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்