Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவிலிருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவி.. மம்தா பானர்ஜி அமைச்சரவை விரிவாக்கம்!!

Sekar August 03, 2022 & 16:40 [IST]
பாஜகவிலிருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவி.. மம்தா பானர்ஜி அமைச்சரவை விரிவாக்கம்!!Representative Image.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்து 9 புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

பாபுல் சுப்ரியோ, சினேகஸ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர், தஜ்முல் ஹொசைன், சத்யஜித் பர்மன், பிர்பாஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லாப் ராய் சௌத்ரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த ஆண்டு திரிணாமுல் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும். பள்ளி ஆசிரியர் வேலை வாய்ப்பு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறையால் மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் நடந்த இந்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான பாபுல் சுப்ரியோவும் இடம் பெற்றுள்ளது திரிணாமுல் கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் பாஜகவில் இருந்து விலகி, திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார். தற்போது கொல்கத்தாவில் உள்ள பாலிகுங்கே சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் கட்சி எம்எல்ஏவாக அவர் உள்ள நிலையில், கட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் அவருக்கு மம்தா பானர்ஜி அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்