தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியாகியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இது தொடர்பாக நேற்று சட்ட வல்லுனர்கள் மட்டும் அதிமுக நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…