Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேர்தல் அறிவிப்பு.. இரட்டை இலை சின்னம் முடங்குமா.. தவிக்கும் தொண்டர்கள்!!

Sekar June 19, 2022 & 20:34 [IST]
தேர்தல் அறிவிப்பு.. இரட்டை இலை சின்னம் முடங்குமா.. தவிக்கும் தொண்டர்கள்!!Representative Image.

தமிழக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உட்கட்சி மோதலால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஓயாமல் அதிகரித்து வருகிறது. அக்கட்சியின் பொதுக்குழு தொடங்கும்போது ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையேயான மோதல் உச்ச கட்டம் அடைவதோடு, கட்சி உடையக்கூட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. அப்படி உடைந்தால் இரட்டை இலை சின்னம், கட்சி பெயர் என அனைத்தும் முடக்கப்படலாம்.

இந்நிலையில், தற்போது தமிழக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. இதற்கான மனு தாக்கல் நாளை துவங்கும் நிலையில் வரும் 27ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டால், போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தான் என்பதற்கான படிவத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட வேண்டும் என்பதே கட்சியின் தற்போதைய விதி.

தற்போது, ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அடுத்து என்ன நடக்கும் என்பதே குழப்பத்தில் உள்ள நிலையில், இரட்டை இலை சின்னமே முடங்கி விடுமா என கட்சித் தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்