Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் வேண்டாமா.. இந்தாங்க ராஜினாமா கடிதம்.. உருகிய உத்தவ்!!

Sekar June 22, 2022 & 19:16 [IST]
நான் வேண்டாமா.. இந்தாங்க ராஜினாமா கடிதம்.. உருகிய உத்தவ்!!Representative Image.

சிவசேனாவில் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இறுதியாக இன்று தனது மௌனத்தை கலைத்து முகநூலில் வெப்காஸ்ட் மூலம் 17 நிமிடம் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். 

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் யாரேனும் ஒருவர் கூட என்னை முதல்வராக பார்க்க விரும்பவில்லை என்று கூறினால் உடனே ராஜினாமா செய்ய தயார் என்று அப்போது உத்தவ் தாக்கரே தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவர் கூட என்னை முதல்வராக விரும்பவில்லை என்று கூறினால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவேன் என்று தாக்கரே கூறினார்.

கிளர்ச்சி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவால் தாக்கரேவின் அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சிக்கு தலைமை தாங்க தான் சரியான நபர் அல்ல என்று சிவசேனாவினர் கருதினால், சிவசேனா தலைவர் பதவியையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

“சூரத் மற்றும் பிற இடங்களில் இருந்து அறிக்கைகளை ஏன் வெளியிட வேண்டும்? முதல்வர் மற்றும் சிவசேனா தலைவர் பதவிகளை கையாள நான் தகுதியற்றவன் என்பதை நேரில் வந்து சொல்லுங்கள். உடனே ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை தயார் நிலையில் வைத்திருப்பேன், நீங்கள் வந்து அதை ராஜ்பவனுக்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று தாக்கரே மேலும் கூறினார்.

உத்தவ் தாக்கரே மேலும், "முதல்வர் பதவிகள் வரும் போகும். ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து. கடந்த 2 ஆண்டுகளில், மக்களிடம் அதிக பாசத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது" என்றார். 

இதற்கிடையே சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே நீடிக்க வேண்டும் என்று 34 கிளர்ச்சி எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய சிவசேனா சட்டமன்றக் கட்சி தீர்மானம் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்