Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல...

Nandhinipriya Ganeshan September 10, 2022 & 13:20 [IST]
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல...Representative Image.

இன்றைய சமூகம் எந்த சூழலையும் சமாளித்து போராடி அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர துணிவதில்லை. பிரச்சனையில் இருந்து தப்பிக்க கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் 'தற்கொலை'. 

தேர்வு பயம் என்றாலும் தற்கொலை, தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைவில்லை என்றாலும் தற்கொலை. கடன் வாங்கி கட்ட முடியவில்லை என்றாலும் தற்கொலை. கல்யாணம் ஆகவில்லை என்றாலும் தற்கொலை. காதல் தோல்வி, குழந்தையின்மை, குடும்ப பிரச்சனை, மற்றும் பல காரணங்கள், ஏன் ஒரு சிலர் விளையாட்டில் தோல்வி அடைந்தததால் கூட தற்கொலை செய்துகொள்கின்றனர். இப்படி இளைஞர்கள், இளைஞர்கள், விவசாயிகளின் தற்கொலை விகிதம் என்பது சமீப காலமாக பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதை நாமும் தினந்தோறும் கேட்டும் பார்த்தும் வருகிறோம். 

Also Read: தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? 

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்த திடீர் மரணங்கள் அவர்களது குடும்பத்தினர், நண்பர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், லட்சக்கணக்கானோர் கடுமையான மனஉலைச்சலுக்கு ஆளுகின்றனர்.

இதனை தடுப்பதற்காகவே 2003 ஆம் ஆண்டு WHO உடன் இணைந்து தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் நிறுவப்பட்டது. அதன்படி, 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி "உலக தற்கொலை தடுப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நாளின் முக்கியத்துவமே தற்கொலைகளை தடுப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே. மேலும், இந்நாளில் ஒரு மனிதனுக்கு தேவையான மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 

எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்த்து போராட முயற்சி செய்யுங்கள். பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அதையும் மீறி தற்கொலை எண்ணம் தோன்றினால் தேசிய தற்கொலை தடுப்பு மையம் 988 என்ற டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து பேசுங்கள். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவல்ல.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்