Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,188.89
-559.53sensex(-0.77%)
நிஃப்டி21,864.00
-191.70sensex(-0.87%)
USD
81.57
Exclusive

முதன் முதலில் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கணும்... எப்படி கொடுக்கணும்..

Nandhinipriya Ganeshan September 22, 2022 & 17:30 [IST]
முதன் முதலில் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கணும்... எப்படி கொடுக்கணும்..Representative Image.

குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் பற்றியும், முதன் முதலில் குழந்தைக்கு என்ன உணவு குடுக்க வேண்டும் என்பதை பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக, குழந்தைக்கு முதன் முதலில் உணவு கொடுக்கும் போது ஜீரண சக்தி என்பது குறைவாக இருக்கும். எனவே எந்த உணவுகளை எப்படி கொடுக்கவேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்போதிலிருந்து திட உணவு கொடுக்கணும்? 

முதன் முதலில் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கணும்... எப்படி கொடுக்கணும்..Representative Image

3 நாள் விதிமுறை:

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை திட உணவுகளை சாப்பிட தயாராகிவிட்டது என்றால், முதலில் மூன்று நாள் விதிமுறையை பின்பற்றுங்கள். அதாவது, எந்த உணவாக இருந்தாலும் சரி 3 நாட்கள் கொடுத்த பாருங்கள், இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். 

1வது நாள் கொடுக்கும் போது 1 டேபிள் ஸ்பூன் உணவை ஒரு முறை கொடுக்க வேண்டும்.

2வது நாள் 2 டேபிள் ஸ்பூன் உணவை இரண்டு முறை கொடுக்க வேண்டும்.

3வது நாள் 3 டேபிள் ஸ்பூன் உணவை 2 முறை கொடுக்க வேண்டும். 

ஒருவேளை குழந்தைக்கு வயிற்று வலி, வயிற்றாலை, வாந்தி போன்றவை ஏற்பட்டால் உடனே உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டு, ஒரு நாள் கழித்து வேறு ஒரு புதிய உணவை கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் போய்விட்டது என்று அந்த உணவுகளை கொடுக்காமல் இருக்க கூடாது. அவர்கள் அனைத்து உணவைகளையும் சுவைக்க வேண்டும். எனவே, 4 - 6 வராங்களுக்கு பிறகு அம்மாதிரியான உணவுகளை கொடுத்துப் பாருங்கள். 

முதன் முதலில் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கணும்... எப்படி கொடுக்கணும்..Representative Image

முதன் முதலில் உணவு:

முதன்முதலில் குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது தாய்ப்பால் அல்லது பார்முலா பால் சேர்த்து கஞ்சி போன்ற பதத்தில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியான பதத்தில் கொடுக்கலாம். 

ஒவ்வொரு முறை உணவு கொடுக்கும்போதும் சாப்பிடும் சூட்டில் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ரொம்ப சூடாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. 

மேலும், உங்கள் குழந்தைக்கென்றே தனி பாத்திரங்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறை உணவு கொடுக்கும்போதும் பாத்திரங்களை வெந்நீரில் சுத்தம் செய்துவிட்டு பின்னர் பயன்படுத்துங்கள். அதேபோல், குழந்தைகளின் உணவுப் பொருட்களை அரைப்பதற்கென தனியாக மிக்ஸி ஜார் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு பால்டப்பா பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு கப், ஸ்பூன், டம்ளர் போன்ற பொருட்களை பயன்படுத்துங்கள்.

குழந்தைக்கு ஒரே நேரத்தில் இரண்டு உணவுப்பொருட்களை கொடுக்கலாமா? என்றால் கொடுக்கலாம். ஆனால், அவை இரண்டும் ஏற்கனவே குழந்தைக்கு பழக்கப்பட்ட உணவாக இருக்க வேண்டுமே தவிர, இரண்டு புதிய உணவுகளை ஒன்றாக சேர்த்து கொடுக்க வேண்டாம்.

எந்த குழந்தையும் எடுத்த உடனேயே சாப்பிட பழகிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதற்காக கவலைப்படாதீர்கள். உணவை முழுமையாக சாப்பிட சில மாதங்கள் கூட ஆகலாம்.   

உணவு கொடுக்கும் நேரம் என்று பார்த்தால் காலை 11 - 12 வரையும், பிற்பகல் 4 - 6 வரையும் குழந்தைக்கு உணவு கொடுக்கலாம். குறிப்பாக 1 வயதுக்கு குறைவான குழந்தைக்கு கொடுக்கும் உணவில் சர்க்கரை, உப்பு, தேன் போன்ற உணவு பொருட்களை சேர்க்க வேண்டாம். அதன் பிறகு ஓகே.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை அல்லவா, எனவே முதல் முறையாக உணவை கொடுக்கும் போது கூழ், சூப், ஜூஸ் போன்ற பதத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். 

முதன் முதலில் குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கணும்... எப்படி கொடுக்கணும்..Representative Image

உணவு அட்டவணை:

முதல் வாரம்:

 

நாள்

காலை

மதியம்

முதல் நாள்

ஆப்பிள் கூழ்+தாய்ப்பால் 1 டீஸ்பூன்

-

2வது நாள்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 2 டீஸ்பூன்

3வது நாள்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன்

4வது நாள்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 1 டீஸ்பூன்

-

5வது நாள்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 2 டீஸ்பூன்

6வது நாள்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 3 டீஸ்பூன்

7வது நாள்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 3 டீஸ்பூன்

 

2வது வாரம்:

 

நாள்

காலை

மதியம்

முதல் நாள்

அரிசி கஞ்சி 1 டீஸ்பூன்

-

2வது நாள்

அரிசி கஞ்சி 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 2 டீஸ்பூன்

3வது நாள்

அரிசி கஞ்சி 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 3 டீஸ்பூன்

4வது நாள்

வேகவைத்து மசித்த பேரிக்காய் 1 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 1 டீஸ்பூன்

5வது நாள்

வேகவைத்து மசித்த பேரிக்காய் 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 2 டீஸ்பூன்

6வது நாள்

வேகவைத்து மசித்த பேரிக்காய் 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 3 டீஸ்பூன்

7வது நாள்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

 

3வது வாரம்:

 

நாள்

காலை

மதியம்

முதல் நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 1 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் 1 டீஸ்பூன்

2வது நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த கேரட் (அ) ஜூஸ் 2 டீஸ்பூன்

3வது நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த பேரிக்காய் 3 டீஸ்பூன்

4வது நாள்

வேகவைத்து மசித்த ஏதேனும் ஒரு காய்/பழம் 1 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) கேரட் 1 டீஸ்பூன்

5வது நாள்

வேகவைத்து மசித்த ஏதேனும் ஒரு காய்/பழம் 2 டீஸ்பூன்

அரிசி கஞ்சி 2 டீஸ்பூன்

6வது நாள்

வேகவைத்து மசித்த ஏதேனும் ஒரு காய்/பழம் 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த பருப்பு 3 டீஸ்பூன்

7வது நாள்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

 

4வது வாரம்:

 

நாள்

காலை

மதியம்

முதல் நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 1 டீஸ்பூன்

வாழைப்பழ கூழ் 1 டீஸ்பூன்

2வது நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 2 டீஸ்பூன்

வாழைப்பழ கூழ் (அ) பீட்ரூட் கூழ் 2 டீஸ்பூன்

3வது நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் (அ) பீட்ரூட் 3 டீஸ்பூன்

4வது நாள்

அரிசி கஞ்சி 1 டீஸ்பூன்

கேரட் ஜூஸ் (அ) வேகவைத்து மசித்த பேரிக்காய் 1 டீஸ்பூன்

5வது நாள்

வேகவைத்து மசித்த பருப்பு 2 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஏதேனும் ஒரு காய்/பழம் 2 டீஸ்பூன்

6வது நாள்

அரிசி கஞ்சி 3 டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஏதேனும் ஒரு காய்/பழம் 3 டீஸ்பூன்

7வது நாள்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

ஏற்கனவே பழகிய உணவுகளை 3 டீஸ்பூன் கொடுக்கலாம்

 

இதை தவிர்த்து புதிய உணவுகளை கொடுக்க விரும்பினால், 3 நாள் விதிமுறையை பின்பற்றிக் கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்