Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…

Nandhinipriya Ganeshan October 07, 2022 & 18:30 [IST]
6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image.

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் ஆனதும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த திட உணவுகளையும் கொடுக்கலாம். 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பற்கள் முளைச்சிருக்காது என்பதால் ஜூஸ், கூழ், சூப்பாக கொடுக்கலாம். குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவதோடு, ஸ்பூன் எப்படி சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என்றும் கற்றுக்கொடுக்கலாம்.

பிறந்ததில் இருந்து தாய்ப்பாலையே சுவைத்துக் கொண்டிருந்த குழந்தைக்கு முதன் முறையாக வேறு சுவையை உணரத் தொடங்குகிறது. இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் மும்பரமாக இருக்க வேண்டும். குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து திட உணவை கொடுப்பதன் மூலம் நாட்பட்ட நோய்கள், அலர்ஜி, வயிற்று உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

குழந்தைக்கு கழுத்து நின்ற பிறகும் திட உணவுகளை கொடுக்கலாம். ஆனால், அவர்கள் விழுங்கும் அளவிற்கு மிகவும் மென்மையான உணவாக இருக்க வேண்டும். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. இப்போது 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்போதிலிருந்து திட உணவு கொடுக்கணும்? 

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image

திட உணவுகளை கொடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:

திட உணவுகள் கொடுத்தாலும் அவ்வப்போது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் காலையிலும் இரவு தூங்கும்போதும் கொடுக்கலாம்.

குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை ஊட்ட கூடாது.

குழந்தை உணவு வேண்டாம் என்று கழுத்தையோ முகத்தையோ திருப்பினால் உணவைக் கொடுபதை நிறுத்திவிட வேண்டும்.

திட உணவுகளை கொடுப்பதற்கு மதியம் 12 மற்றும் மாலை 4 மணி சரியானது.

உணவு ஊட்டும் போது விளையாட்டு காண்பிக்காமல், குழந்தையிடம் பேசியபடியே உணவை ஊட்டுங்கள்.

குழந்தை கையில் உணவை பிடிக்க ஆர்வம் காட்டினால், நீங்கள் கைகளில் பிடித்தபடியே, குழந்தை உணவை வாயில் வைத்து சாப்பிட கொடுங்கள்.

குழந்தைக்கு எப்போது உணவு ஊட்டினாலும் மூன்று நாள் விதியை கடைப்பிடிக்க வேண்டும்.

மூன்று நாள் விதிமுறைகள்...

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image

முதல் வாரம்:

நாள்

மதியம் 12 P.M

மாலை 4 P.M

திங்கள்

வேக வைத்து மசித்த ஆப்பிள் 1 டீஸ்பூன் 

-

செவ்வாய்

வேக வைத்து மசித்த ஆப்பிள் 2 டீஸ்பூன் 

வேக வைத்து மசித்த ஆப்பிள் 2 டீஸ்பூன் 

புதன்

வேக வைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன் 

வேக வைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன் 

வியாழன்

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 1 டீஸ்பூன் 

-

வெள்ளி

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 2 டீஸ்பூன்

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 2 டீஸ்பூன்

சனி

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 3 டீஸ்பூன்

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 3 டீஸ்பூன்

ஞாயிறு

வேக வைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ் 3 டீஸ்பூன்

வேக வைத்து மசித்த ஆப்பிள் 3 டீஸ்பூன்

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image

இரண்டாவது வாரம்:

நாள்

மதியம் 12 P.M

மாலை 4 P.M

திங்கள்

வேக வைத்து மசித்த கேரட் 

அரிசி கஞ்சி

செவ்வாய்

ராகி கஞ்சி

வேக வைத்து மசித்த ஆப்பிள்

புதன்

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு

சிவப்பு அவல் கஞ்சி

வியாழன்

வேகவைத்து மசித்த பருப்பு

வேகவைத்து மசித்த பேரிக்காய்

வெள்ளி

பப்பாளி கூழ்

சம்பா கோதுமை கஞ்சி

சனி

சப்போட்டா கூழ்

கேரட் பீட்ரூட் சூப்

ஞாயிறு

வேக வைத்து மசித்த பரங்கிக்காய்

வாழைப்பழ கூழ்

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image

மூன்றாவது வாரம்:

நாள்

மதியம் 12 P.M

மாலை 4 P.M

திங்கள்

அரிசி கஞ்சி

ஆப்பிள் கூழ்

செவ்வாய்

வாழைப்பழ கூழ்

வேக வைத்து மசித்த சுரைக்காய்

புதன்

வேக வைத்து மசித்த பீட்ரூட்

சர்க்கரைவள்ளி கிழங்கு கூழ்

வியாழன்

உருளைக்கிழங்கு சூப்

வேகவைத்து மசித்த பேரிக்காய் 

வெள்ளி

ஓட்ஸ் கஞ்சி

பப்பாளி கூழ்

சனி

ஆரஞ்சு ஜூஸ்

வேக வைத்து மசித்த புடலங்காய்

ஞாயிறு

பூசணி கூழ்

அரிசி கஞ்சி

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை…Representative Image

நான்காவது வாரம்:

நாள்

மதியம் 12 P.M

மாலை 4 P.M

திங்கள்

பருப்பு பூண்டு மசியல்

பீட்ரூட், உருளைக்கிழங்கு மசித்தது

செவ்வாய்

வேகவைத்து மசித்த பேரிக்காய்

மசித்த அரிசி சாதம்

புதன்

சப்போட்டா கூழ்

வேகவைத்து மசித்த சுரைக்காய்

வியாழன்

வேகவைத்து மசித்த கேரட் (அ) கேரட் ஜூஸ்

கோதுமை கஞ்சி

வெள்ளி

வேகவைத்து மசித்த காய்கறிகள்

திராட்சை ஜூஸ்

சனி

சம்பா கோதுமை கஞ்சி

வேகவைத்து மசித்த புடலங்காய்

ஞாயிறு

ஆப்பிள் கூழ்

ராகி கஞ்சி

6 மாதத்தில் கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன?

நிலக்கடலை

முழு உலர்திராட்சை

ஆப்பிள் (கூழாக தரலாம்)

விதைகள்

முழு நட்ஸ்

சாக்லேட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்