Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்போதிலிருந்து திட உணவு கொடுக்கணும்? 

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 17:20 [IST]
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்போதிலிருந்து திட உணவு கொடுக்கணும்? Representative Image.

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் ஆனதும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த திட உணவுகளையும் கொடுக்கலாம். 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பற்கள் முளைச்சிருக்காது என்பதால் ஜூஸ், கூழ், சூப்பாக கொடுக்கலாம். குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவதோடு, ஸ்பூன் எப்படி சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என்றும் கற்றுக்கொடுக்கலாம். 

சரியான முறையில் பாலூட்ட சில குறிப்புகள்..

பிறந்ததில் இருந்து தாய்ப்பாலையே சுவைத்துக் கொண்டிருந்த குழந்தைக்கு முதன் முறையாக வேறு சுவையை உணரத் தொடங்குகிறது. இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் மும்பரமாக இருக்க வேண்டும். குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து திட உணவை கொடுப்பதன் மூலம் நாட்பட்ட நோய்கள், அலர்ஜி, வயிற்று உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

ஆண்-பெண் இரட்டை குழந்தைகளுக்கான அழகிய பெயர்கள்..

குழந்தைக்கு கழுத்து நின்ற பிறகும் திட உணவுகளை கொடுக்கலாம். ஆனால், அவர்கள் விழுங்கும் அளவிற்கு மிகவும் மென்மையான உணவாக இருக்க வேண்டும். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. 

உங்க குழந்தை இப்படியெல்லாம் பண்ணுதா?

குழந்தைகள் திட உணவுகள் சாப்பிட தயாரா என்பதை சில செயல்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம். குழந்தை பொருட்களை எடுத்து வாயில் வைப்பது. தன் கைகளால் எதையாவது எடுக்க முயற்சி செய்வது. தேவையான பாலை குடித்த பிறகும் பசியுடன் இருப்பது. ஆட்காட்டி விரல், கட்டை விரலால் பொருட்களை எடுக்கத் தொடங்குவது. தன்னுடையை நாக்கை உள்ளேயும், வெளியேயும் சுழற்றியபடி அதாவது அசைப்போட்டபடி இருப்பது. தானாக எழுந்து உட்காருவது. சாப்பிடுவர்களை பார்த்துக் கொண்டிருப்பது போன்றவற்றை வைத்து குழந்தை திட உணவுகளை சாப்பிட ஆசைப்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

6+ மாத குழந்தைக்கு வீட்டிலேயே சத்துமாவு தயாரிப்பது எப்படி?

திட உணவுகளை கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா. எனில், அவர்களுக்கு எப்போதும் அமர்ந்திருக்கும் நிலையில் தான் உணவைக் கொடுக்க வேண்டும். படுக்கவைத்தபடி உணவு ஊட்டுவதை ஒருபோதும் செய்யாதீர்கள்.

குழந்தைக்கும் உணவு ஊட்டும் ஸ்பூன் கூர்மையாக இருக்க கூடாது, ஒருவேளை கூர்மையாக இருந்தால் குழந்தையின் ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். 

குழந்தைக்கென தனியான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அவற்றை ஒவ்வொரு முறையும் வெந்நீரில் முக்கி எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். 

குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?

உணவு சரியான பதத்தில் இருக்க வேண்டும். ரொம்ப சூடாகவும் இருக்க கூடாது, ரொம்ப ஜில்லென்றும் இருக்க கூடாது, அதிக இனிப்பாகவும் இருக்க கூடாது. 

எந்த உணவாக இருந்தாலும் சரி, தயார் செய்த 2 மணி நேரத்திற்குள் ஊட்டிவிடவேண்டும். 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால், அதை குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்