Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 4: நான்கு மாத கர்ப்பம் அறிகுறிகள்.. | 4 Month Pregnancy Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan August 22, 2022 & 18:15 [IST]
கர்ப்பம் மாதம் 4: நான்கு மாத கர்ப்பம் அறிகுறிகள்.. | 4 Month Pregnancy Symptoms in TamilRepresentative Image.

Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

Also Read: கர்ப்பக் காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்..

COVID-19 and pregnancy: Q&A - Mayo Clinic Health System

கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்கு (second trimester weeks) உங்களை வரவேற்கிறோம். அதாவது கர்ப்ப காலத்தின் 13 மற்றும் 16 வாரங்களை தான் கர்ப்ப காலத்தின் நான்காவது மாதம் என்கிறோம். இந்த கட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இந்த மாதத்தில் குறைந்து புதிய நம்பிக்கை பிறக்கும். வாந்தியும், குமட்டலும் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் நீங்கள் பல புதிய உணர்ச்சி மற்றும் உடல் மாற்றங்களை சந்திக்கலாம். அவற்றை பற்றி தான் விரிவாக இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். 

Also Read: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்..

Constipation In Pregnancy: What To Know, Causes, Treatments – Huggies India

மலச்சிக்கல்:

இந்த மாதத்தில் குழந்தை முழுவடிவம் பெற்றிருப்பான். ஒவ்வொரு உறுப்புகளும் வளரத் தொடங்கும். அதனால், வயிறு பெரியதாகும். அதிகரித்து வரும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் செரிமான செயல்முறையை மாற்றி, தாமதமான குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த கட்டத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். இது அந்த அசௌகரியத்தை தணித்து, செரிமானத்தை எளிதாக்கும். அதுமட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பதும் மலச்சிக்கலை போக்க சிறந்த வழியாகும்.

5 Tips Help You Prevent Constipation During Pregnancy - lifeberrys.com

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

விரிவடையும் கருப்பை சிறுநீர்ப்பையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், நீங்க அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி அல்லது அடிவயிற்றில் வலி இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Also Read: நான்கு மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்..

Smart Ways to Ease Your Pregnancy Back Pain at Home

மூச்சுத் திணறல்:

குழந்தை வளர வளர வயிறு பெரியதாக வளருவதால் வயிறு நுரையீரலின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் சரியாக சுவாசிப்பதற்கு கடினமாக இருக்கும். மூச்சுத் திணறல் அல்லது விரைவான சுவாசத்தை அனுபவிப்பது பொதுவான ஒன்று தான். இருப்பினும், மூச்சுத் திணறல் உங்க பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால், இருதயநோய் நிபுணரை அணுகவும். 

The Second Trimester of Pregnancy: Constipation, Gas & Heartburn

நெஞ்செரிச்சல்:

வயிறு பெரியதாவதால் செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும், இது வயிற்றில் உள்ள அமிலங்களை மேல்நோக்கி தள்ளலாம். இதனால், கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறாது. உணவுமுறையில் ஏற்படும் மாற்றங்கள் செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

Also Read: நான்கு மாத கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..

ஈறுகளில் இரத்தப்போக்கு:

கர்ப்பகால ஹார்மோன்கள் ஈறுகளை மென்மையாக்குகின்றன மற்றும் அவற்றின் உணர்திறனை அதிகரிக்கின்றன. இதனால், பல் துலக்கும்போது சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

Indigestion in Pregnancy – Reasons, Signs & Home Remedies

மூக்கில் இரத்தம் வருதல்:

மூக்கில் இரத்த ஓட்டம் அதிகரிப்பது மூக்கின் உள்ளே இருக்கும் சிறிய இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், மூக்கிலிருந்து இரத்தக் கசிவை உண்டாக்கும். எனவே, இந்த மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Also Read: கர்ப்பிணிகள் வேக வைத்த முட்டை சாப்பிடலாமா?

காலை நோய்: 

முதல் மூன்று மாதங்களில் காலை நோய் 'Morning sickness' பொதுவானது என்றாலும், குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் கர்ப்பத்தின் பிற்பகுதியில் கூட ஏற்படலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்