4 Month Pregnancy in Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்குமே இருக்கும் பொதுவான சந்தேகம் தான் இது. முதல் மூன்று மாதம் வரை உடலுறவு வேண்டாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனென்றால், முதல் மூன்று மாதம் வரை கரு நிலைக்குமா என்று உறுதியாக சொல்லமுடியாது. அந்த சமயத்தில் உடலுறவு கொள்வதால் கரு சிதைவுக்கு வழிவகுக்கும். ஆனால், நான்காவது மாதத்தில் நீங்கள் கர்ப்பமடைவதற்குமுன் பாலுறவில் ஈடுபட்டதைப்போலவே இருக்கலாம்.
ஏனென்றால், இந்த மாதத்தில் கரு உறுதி செய்யப்பட்டிருக்கும். இதனால், கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருந்தாலும், உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ, இரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது முந்தைய கருத்தரிப்பில் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தாலோ முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
ஏனென்றால், இம்மாதிரியான பிரச்சனைகள் இருப்பின் குழந்தை பிறக்கும் வரை பாலுறவில் ஈடுபடாமல் இருப்பது பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால், பல பெண்கள் கர்ப்பக் காலத்தில் அசௌகரியமாக உணர்ந்து பாலுறவில் ஈடுபட விரும்பமாட்டார்கள். அந்த மாதிரியான சமயங்களில் மற்ற வழிகளில் அன்பை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம்.
அதாவது, பாலுறவிற்கு பதிலாக கட்டித்தழுவுவது, முத்தமிடுவது போன்றவற்றின் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். மேலும், இந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் கணவரிடம் பேசுங்கள்.
அப்படியே உறவுக்கொண்டாலும் உங்களுக்கு பிசுபிசுப்பான திரவக் கசிவு ஏற்பட்டாலோ அல்லது அரிப்பு இருந்தாலோ காப்பு உறையை பயன்படுத்துவது நல்லது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பமாக இருக்கும்போது எப்போதும் காப்பு உறையைப் பயன்படுத்துவதும் நல்லது.
ஏனென்றால், இது பாலுறவு மற்றும் ஹெச்ஐவி மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றிலிருந்து அவை உங்களையும், உங்கள் குழந்தையையும் பாதுகாக்கும். அதேபோல், பாலுறவில் ஈடுபவதற்கு முன்பு ஆண்களுக்கு தொற்று ஏதேனும் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை பாலுறவிற்கு பிறகு உங்களுடைய பெண்ணுறுப்பை சுற்றி தடிப்பு அல்லது சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் ஆகியவை இருந்தால், சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…