Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Monkeypox in Tamil: குரங்கு அம்மை நோய் இப்படி தான் பரவுதா? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்னென்ன?

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 12:07 [IST]
Monkeypox in Tamil: குரங்கு அம்மை நோய் இப்படி தான் பரவுதா? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்னென்ன?Representative Image.

Monkeypox in Tamil: இவ்வளவு நாளாக கொரோனா என்ற கொடிய நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது, இன்னமும் லட்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இதனால், உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், 1980 களில் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயைப் போன்றே குரங்கு அம்மை எனப்படும் மற்றொரு வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். 

குரங்கு அம்மை என்பது என்ன?

சின்னம்மை, பெரியம்மை போன்று இதுவும் ஒரு அம்மை (Monkeypox) நோயாகும். குரங்கு அம்மை வைரசால் ஏற்படும், இந்நோயானது தீவிரத்தன்மை இல்லாதது. து Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxviral என்னும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. முதன் முதலில் இந்த வைரஸ் 1958 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்குகளிடம் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மனிதரிகளிடன் இந்த பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதன் பிறகு, இந்த வருடம் தான் பிரிட்டனில் முதல்முறையாக இந்த குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. 

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

என்ன தான் தீவிரத்தன்மை இல்லாமல் இருந்தாலும், சற்று பீதியை கிழப்பதான் செய்கிறது. மனிதர்களில், இந்த அம்மையின் அறிகுறிகள் பெரியம்மையின் அறிகுறிகளைப் போலவே இருக்கும், ஆனால் லேசானதாக இருக்கும். பொதுவாக, தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு ஆகியவற்றுடன் தொடங்குகிறது குரங்கு அம்மை. பெரியம்மை மற்றும் குரங்கு அம்மையின் அறிகுறிகளுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், குரங்கு அம்மை நிணநீர் முனைகளை வீங்கச் செய்கிறது, ஆனால் பெரியம்மை ஏற்படாது. இந்த வைரஸ் மனித உடலுக்குள் உயிர் வாழும் காலம் 6 முதல் 13 நாட்கள் ஆகும். இந்த காலத்தில் தான் பரவத் தொடங்கு, தொற்றாய் அதிகரிக்கச் (Monkeypox Symptoms in Tamil) செய்யும். 

நோய்த்தொற்றின் முதல் 5 நாட்களுக்குள்,

  • காய்ச்சல்
  • கடுமையான தலைவலி
  • தசை வலிகள்
  • முதுகு வலி
  • வீங்கிய நிணநீர் கணுக்கள் 
  • உடல் ஆற்றல் இன்றி இருப்பது

போன்ற அறிகுறிகள் தோன்றும். 

காய்ச்சல் தொடங்கிய 1 முதல் 3 நாட்களுக்குள், நோயாளிகளுக்கு முகத்தில் தொடங்கி பின்னர் கை, கால், முகம், கழுத்து போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த அம்மை உருவாவதற்கு முன்பு பின்வரும் நிலைகளில் தோன்றும்.

  • மாகுல்ஸ்
  • பருப்புக்கள்
  • கொப்புளங்கள்
  • தடிப்புகள்
  • சிரங்குகள்

ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குரங்கு அம்மை எப்படி பரவுகிறது?

மங்கி பாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குகளிடம் தொடர்பு கொள்ளும்போது குரங்கு அம்மைப் (monkeypox virus causes) பரவுகிறது. இந்த வைரஸ் உடைந்த தோல், மூக்கு, வாய், கண் வழியாக உடலில் நுழைகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரு தும்மல் மற்றும் இருமலின் போதும், ஒரே படுக்கையை பயன்படுத்துவதன் மூலமும், உடல் திரவங்கள் மூலமும் எளிதில் பரவக்கூடியது. 

உயிரைக் கொல்லும் டெங்கு நோயினைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை….!

தொற்று பரவாமல் தடுப்பது எப்படி?

குரங்கு பாக்ஸ் வைரஸ் தொற்றைத் தடுக்க பல நடவடிக்கைகள் உள்ளன:

வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும் (நோய்வாய்ப்பட்ட விலங்குகள் அல்லது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறந்த விலங்குகள் உட்பட).

நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு பயன்படுத்திய எந்தவொரு பொருட்களையும் தொடாமல் இருப்பது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரை மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். 

பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு உங்களுடைய கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். அல்லது சானிடைஷர்களை பயன்படுத்துங்கள்.

நோயாளிகளைக் கவனிக்கும்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் (PPE) பயன்படுத்துதல். 

கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்… இல்லைனா பின்விளைவுகள் மோசமாக வாய்ப்புண்டு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்