Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நல்லா சுருக்குன்னு கார அவல் பொங்கல் செய்வது எப்படி? | Aval Khara Pongal in Tamil

Priyanka Hochumin Updated:
நல்லா சுருக்குன்னு கார அவல் பொங்கல் செய்வது எப்படி? | Aval Khara Pongal in Tamil Representative Image.

பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்து சூரிய கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சாப்பிடுவது நம் வழக்கம். ஆனால் இந்த பொங்கல் பண்டிகையின் போது சற்று வித்தியாசமாக அவல் பயன்படுத்தி பொங்கல் செய்யலாமா? அவல் பொங்கலை இனிப்பு காரம் என்று இரண்டு வகையாகவும் செய்யலாம். ஆனால் இந்த பதிவில் கார அவல் பொங்கல் எப்படி செய்வது என்று பாப்போம்.

இதில் மிளகு, இஞ்சி, சீரகம் என்று மருத்துவ குணங்கள் சேர்ந்த பல பொருட்கள் சேர்த்து சமைப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் ஜீரண கோளாறு இருக்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும். 

நல்லா சுருக்குன்னு கார அவல் பொங்கல் செய்வது எப்படி? | Aval Khara Pongal in Tamil Representative Image

தேவையான பொருட்கள்

அவல் - 1 கப் 

பாசிப்பருப்பு – 1/2 கப் 

சீரகம் - 1 ஸ்பூன் 

உடைத்த மிளகுத் தூள் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு 

நெய் - தேவையான அளவு

கருவேப்பிலை - ஒரு கொத்து 

முந்திரி - ஒரு கைப்பிடி 

மிளகு - சிறிதளவு

நல்லா சுருக்குன்னு கார அவல் பொங்கல் செய்வது எப்படி? | Aval Khara Pongal in Tamil Representative Image

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மற்றும் அவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு, அவலை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வந்த உடன் இறக்கி விடுங்கள்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான உடன், நெய் ஊற்றி அதில் சீரகம், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.

அதற்கு பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

அவை அனைத்தும் ஒன்று சேர்ந்த பின்னர் முந்திரி, மிளகு போட்டு கிண்டி விடவும்.

இறுதியாக வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் அவலை சேர்த்து கிளறி விடுங்கள். சிறிது நேரம் வெந்த பிறகு கீழே இறக்கி விடுங்கள்.

அவ்ளோ தான் சூடான காரணமான அவல் கார பொங்கல் தயார். நீங்கள் சூடாக இருக்கும் போதே உங்கள் குடும்பத்துடன் உண்டு மகிழலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்