Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஈஸியா சேமியா பொங்கல் செய்வது எப்படி? | Semiya Pongal Recipe in Tamil

Priyanka Hochumin Updated:
ஈஸியா சேமியா பொங்கல் செய்வது எப்படி? | Semiya Pongal Recipe in Tamil Representative Image.

நாம் வழக்கமாக சேமியா பாயசம், கிச்சடி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் சற்று புதுமையாக சேமியா பொங்கல் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இந்த பொங்கலுக்கு சற்று வித்தியாசமாக பொங்கல் செய்து புதுமையான ஆரம்பத்தை தொடங்குவோம் வாங்க. இந்த பதிவில் சுவையான சேமியா சக்கரை பொங்கல் எப்படி செய்வது என்று பாப்போம்.

இந்த பொங்கலை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் உண்டு மகிழலாம். சக்கரை நோயாளிகள் கூட தரலாமாக சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் அனைத்து பொருட்களையும் கொண்டு செய்யப்படுவதால் மிகவும் நல்லது.

ஈஸியா சேமியா பொங்கல் செய்வது எப்படி? | Semiya Pongal Recipe in Tamil Representative Image

தேவையான பொருட்கள்

சேமியா

பாசிப்பருப்பு - 1 கப் 

பொடித்த  வெல்லம் - 1 கப் 

ஏலக்காய் தூள் 

வெட்டப்பட்ட பாதாம் - 1 கைப்பிடி 

முந்திரி - 1 கைப்பிடி 

திராட்சை - 1 கைப்பிடி 

துருவிய தேங்காய் – 1 கப் 

நெய்

ஈஸியா சேமியா பொங்கல் செய்வது எப்படி? | Semiya Pongal Recipe in Tamil Representative Image

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும், பின்பு அதில் சேமியாவை போட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.

சேமியா நல்ல வெந்த பிறகு அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து குக்கர் அல்லது பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறத்தில் வதக்க வேண்டும். பருப்பு வதங்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதே பாத்திரத்தில் பருப்புடன், சேமியாவை சேர்த்து கிளறி விடுங்கள்.

அதன் பின்பு வெல்லத்தை போட்டு எல்லாம் ஒன்றாக சேரும் வரை கிண்டி விடுங்கள்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்துக்கொண்டு முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து வதக்கவும். இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து பொங்கல் செய்த பாத்திரத்தில் போட்டு கலந்து விடுங்கள்.

ஆரோக்கியமான சுவையான சேமியா சக்கரை பொங்கல் ரெடி. சூடாக இருக்கும் போது சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும். இந்த பொங்கலுக்கு இப்படி பொங்கல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்