Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

குழந்தைகள் வாலுடன் பிறப்பதற்கு கர்ப்பத்தின் போது நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்...

Nandhinipriya Ganeshan Updated:
குழந்தைகள் வாலுடன் பிறப்பதற்கு கர்ப்பத்தின் போது நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்...Representative Image.

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சில சமயங்களில் அவை இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கின்றன. தற்போது, அப்படி ஒரு சம்பவம் தான் மெக்சிகோ நாட்டில் நடந்துள்ளது.

வாலுடன் பிறந்த பெண் குழந்தை..

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். நீண்ட நேரம் பிரசவ வழியால் துடித்த அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, நடந்த ஒரு விஷயம் தான் மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது. உருளை வடிவத்தில் இருந்த அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்டிருந்துள்ளது.

குழந்தைகள் வாலுடன் பிறப்பதற்கு கர்ப்பத்தின் போது நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்...Representative Image

அறுவை சிகிச்சை..

உடனே, மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த வாலை நீக்கியுள்ளனர். தற்போது, அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் அர்ஷித் அலி கான் என்ற ஒரு குழந்தை வாலுடன் பிறந்தது. 14 வயதாகும் வரை அந்த சிறுவன் வாலுடனேயே இருந்துள்ளான். அந்த சிறுவனை அனுமானின் மறுபிறவி என்று கூறி, அவனை மக்கள் வணங்கி வந்தார். பின்னர் அந்த சிறுவனுக்கு விருப்பம் இல்லாததாலும், தொந்தரவாக இருந்ததாலும் மருத்துவர்கள் அந்த வாலை அகற்றிவிட்டார்கள். 

குழந்தைகள் வாலுடன் பிறப்பதற்கு கர்ப்பத்தின் போது நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்...Representative Image

வாலுடன் பிறக்க என்ன காரணம்?

எல்லா குழந்தைகளுக்கும் இது போல ஆவது கிடையாது. இருப்பினும், இம்மாதிரியான அரிதான சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். அதாவது, கர்ப்பத்தின் 6வது வாரத்தில், கருமுட்டையானது பல முதுகெலும்பு நிறைந்த ஒரு வாலினை பெற்றிருக்கும். இருப்பினும், அடுத்த 2 வாரங்களில் முதுகெலும்புகள் உருவாகுவதால், வால் மறைந்து வால் எழும்பு உருவாகிறது.

இருந்தாலும் சில குழந்தைகள் வெஸ்டிஷியல் வால் உடன் பிறக்கின்றனர். ஆனால், இந்த வால்கள் முதுகெலும்பு இல்லாதவை மற்றும் பாதிப்புகள் இல்லாதவை. அதுமட்டுமல்லாமல், தண்டுவடம் முழுவதுமாக இணைக்கத் தவறுவதாலும் இதுபோன்று வால் உருவாகிறது. எனவே, இவற்றை அறுவை சிகிச்சை மூலம் எளிதில் அகற்ற முடியும். இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்