Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

What is the Alternative to Plastic: இனிமே பிளாஸ்டிக்கு பதிலா இத யூஸ் பண்ணுங்க...

Nandhinipriya Ganeshan July 03, 2022 & 13:30 [IST]
What is the Alternative to Plastic: இனிமே பிளாஸ்டிக்கு பதிலா இத யூஸ் பண்ணுங்க... Representative Image.

What is the alternative to plastic: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ்உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப்பொருட்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். 

பிளாஸ்டிக்:

அந்த காலத்தில் மக்கள் மண்பாண்டங்களை தான் அனைத்திற்கும் உபயோகம் செய்தனர். இதனால், எந்தவித நோயும் அவ்வளவு எளிதில் அவர்களை தாக்கவில்லை. ஆனால், இப்போதெல்லாம் அனைவரது வீட்டுகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஏனென்றால், இவை மற்ற பொருட்களை காட்டிலும் விலையும் மலிவு, கையாளுவதும் எளிது. ஆனால், நிறைய நோய்களை சம்பாதிப்பாதித்து வைத்துள்ளோம். 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு சிறந்த மாற்று:

உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் குறைவாகவும், உலகில் பிளாஸ்டிக் கழிவுகள் குறைவாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுறீங்களா? அப்போ பிளாஸ்டிற்கு பதிலாக இந்த மாதிரியான பொருட்களை (Best Alternatives to Plastic) பயன்படுத்த ஸ்டார்ட் பண்ணுங்க மக்களே..

❖ துருப்பிடிகாத எஃகு (Stainless steel): சமீப காலமாக இந்த மாதிரியான பொருட்கள் உபயோப்பதன் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளன. ஏனென்றால், சுத்தம் செய்வது எளிது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய உணவு மற்றும் பானங்களை சேமிப்பதற்கும் ஏற்றது. ஒருமுறை பயன்படுத்தும் கப்கள், லன்ச் பாக்ஸ், சமையல் பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தும் டப்பாக்கள் போன்று பல பொருட்களை மாற்றலாம். 

❖ கண்ணாடி (Glass): கண்ணாடி பொருட்கள் மக்கும் தன்மையுடையதாக இல்லாவிட்டாலும், முடிவில்லாமல் மறுசுழற்சி செய்யக்கூடியது. வீட்டில் பயன்படுத்தும் குறிப்பாக சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களையாவது கண்ணாடியால் செய்யப்பட்டதாக பயன்படுத்துங்கள். 

❖ பிளாட்டினம் சிலிக்கான் (Platinum silicone): இந்த பொருட்கள் அனைத்தும் மணலால் செய்யப்படுகிறது. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது, எனவே இதை சமைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் கலப்படம் இல்லாத சிலிகான் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள். 

❖ தேன் மெழுகு பூசிய கிளாத் (Beeswax-coated cloth): குறிப்பாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தேன் மெழுகு பூசப்பட்ட துணிகளை பயன்படுத்துவதும் எளிது. அதுமட்டுமல்லாமல், எளிதாகவும் சுத்தம் செய்துவிடலாம். இதன் வாசனையும் நன்றாக இருக்கும். 

❖ இயற்கை ஃபைபர் கிளாத் (Natural fiber cloth): பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். கரிம பருத்தி, கம்பளி, சணல் அல்லது மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்டது. இதை மறுசுழற்சியும் செய்யலாம். மண்ணில் மக்கும் தன்மையும் கொண்டது. 

❖ மரச்சாமான்கள் (Wood): எந்த ஒரு தீங்கும் விளைவிக்காத பொருள் என்றால் மரத்தால் ஆனவை தான். காய்கறிகளை நறுக்கும் கட்டிங் போர்டு, கரண்டிகள், வாட்டர் பாட்டில்கள் என அதிகம் பயன்படுத்தும் பல பொருட்கள் மரத்தால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி பயன்படுத்துங்கள். பாதுகாப்பானதும் கூட. 

❖ மூங்கில் (Bamboo): நாம் ஒருமுறை பயன்படுத்தி தூக்கிப்போடும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு சிறந்த மாற்று மூங்கில். இன்னும் ஏராளமான பொருட்கள் மூங்கிலால் தயாரிக்கப்படுகிறது. இதுவும் மக்கும் தன்மை கொண்டது தான். 

❖ பேப்பர் (Paper): பேப்பரால் செய்யப்பட்ட பைகளை பயன்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்