Sun ,Feb 25, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

ப்ரக்னன்சி டெஸ்ட் எடுப்பதற்கு சிறந்த நேரம் இதுதான்.. எல்லா பெண்களும் தெரிஞ்சுக்கணும்.. | How to Check Pregnancy at Home with Kit in Tamil

Nandhinipriya Ganeshan May 03, 2022 & 18:30 [IST]
ப்ரக்னன்சி டெஸ்ட் எடுப்பதற்கு சிறந்த நேரம் இதுதான்.. எல்லா பெண்களும் தெரிஞ்சுக்கணும்.. | How to Check Pregnancy at Home with Kit in TamilRepresentative Image.

திருமணமான அனைத்து பெண்ணுகளுக்கும் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று சொன்னால், தாய்மை அடைவது தான். நாமும் கருவுற்று தாயாகப் போகிறோம் என்ற சந்தோசத்தை எந்த பெண் தான் விரும்பமாட்டாள். இதற்காக பல தாய்மார்கள் தவமாய் தவமிருக்கின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு பெண்களும் அந்த அற்புதமான தருணத்தை உறுதி செய்ய எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

திருமணமான ஒரு பெண் மாதவிடாய் தள்ளி போன உடன், தலைச்சுற்றல், மசக்கை வாந்தி, குமட்டல் உணர்வு வந்தவுடன் இந்த பரிசோதனை செய்யலாமா?, எத்தனை நாட்கள் கழித்து இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?, எது சிறந்த நேரம்? என்பது பற்றி அனைத்து தகவல்களையும் விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

கர்ப்ப பரிசோதனை என்றால் என்ன?

கர்ப்ப பரிசோதனை என்பது சிறுநீரில் உள்ள ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஹீயூமன் சாரியோநிக் கோநாடாட்ரோபின் (ஹெச்சிஜி) அளவை கொண்டு அறியும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். கரு உருவானதும் அது தன்னை கர்ப்பப்பையில் பொதிந்து கொள்கிறது. கருவை சுற்றி உள்ள செல்கள் ஹெச் சி ஜி என்ற ஹார்மோனை சுரக்கின்றன. அது தாயின் ரத்தத்தில் கலக்கிறது. இந்த ஹார்மோனின் ஒருபகுதி சிறுநீர் வழியாக வெளியேறும். அதைத்தான் இந்த பரிசோதனைகள் கண்டுபிடிக்கின்றன. இது ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை வீட்டிலேயே பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இல்லையெனில், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகியும் அறிந்துக் கொள்ளலாம். தற்போது, வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யக்கூடிய கருவி மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

எத்தனை நாட்களில் டெஸ்ட் செய்ய வேண்டும்?

உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் தள்ளிப் போகும் போது தான் இந்த கர்ப்ப பரிசோதனையை செய்ய வேண்டும். அதாவது ஒரு சில பெண்களுக்கு 25 நாட்களும் ஆகலாம் அல்லது 30 நாட்களும் ஆகலாம். எனவே, உங்களுடைய மாதவிடாய் தேதியை நினைவில் வைத்துக்கொண்டு, தேதி முடிந்து 7 டூ 9 நாட்கள் கழித்து இப்பரிசோதனையை (which time is best for pregnancy test) செய்யலாம். அப்படி செய்யும்போது அந்த கருவி கர்ப்பத்தின் போது உற்பத்தியான ஹெச்சிஜி ஹார்மோன்களை கண்டுபிடித்துவிடும்.

ஆனால், நீங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்னரே இப்பரிசோதனையை செய்யக் கூடாது. ஏனெனில், அவ்வாறு செய்யும்போது எதிர்மறையான முடிவை காட்டிவிடும். அதனால் மாதவிடாய் தவறும் நாள் வரை காத்திருந்து இப்பரிசோதனையை செய்வது நல்லது.

கர்ப்ப பரிசோதனை எப்போது துல்லியமாக இருக்கும்?

உங்களுடைய பீரியட்ஸ் தவறும் முதல் நாள் மற்றும் அதற்கு பின்னர் வீட்டில் செய்யப்பட்டும் கர்ப்ப பரிசோதனை மூலம் 99% சரியான முடிவை காட்டும். கர்ப்பத்தின் ஆரம்பத்தில், காலையில் , முதல் யூரினில் சரியான முடிவு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில், காலை நேரத்தில் வரும் முதல் யூரினில் அதிக செறிவான தன்மை இருக்கும். எனவே, கர்ப்ப பரிசோதனைக்கு உகந்த நேரம் எது என்று சொன்னால் காலை நேரம் தான் (right time pregnancy test).

ஆனால் கட்டாயமாக முதல் சிறுநீரில் தான் முடிவு சரியாக வர வேண்டும் என்று அவசியம் இல்லை. கரு வளர வளர, எப்போது பரிசோதனை செய்தாலும் சரியான முடிவையே காட்டும். மேலும், மாதவிடாய் ஏற்பட வேண்டிய காலத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்படும் பரிசோதன சரியான முடிவை தராது. அதேபோல் சாதனத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது காலாவதி ஆகியிருந்தாலோ சரியான முடிவை தராது.

இந்த டெஸ்ட்டை எப்படி செய்ய வேண்டும்?

மிகவும் எளிது. ஒரு பரிசோதனையை கருவியை வாங்கிக்கொள்ள (how to use pregnancy tester in tamil) வேண்டும். அதில் செவ்வகமாக ஒரு குழிவும், வட்டமாக ஒரு குழியும் இருக்கும். சிறுநீரை விடுவதற்கு ஃபில்லர் போல ஒரு சிறிய கருவி இருக்கும். அதில் 5-6 சொட்டு சிறுநீரை எடுத்து, அதை வட்டமான குழியில் சொட்டு சொட்டாக விட்டால், அது செவ்வக குழிவுப் பகுதியில் பரவி வருவதை பார்க்கலாம். மேலும், அதன் பக்கவாட்டில் C, T, என்று இரண்டு எழுத்துக்கள் இருக்கும். சி என்பது கண்ட்ரோல், T டெஸ்ட்.

எல்லோருக்கும் C என்ற இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கோடு தெரியும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு டி T என்ற இடத்திலும் கோடு உண்டாகும் . இப்படி இரட்டை கோடு உண்டாவதே டெஸ்ட் பாசிட்டிவ் என்கிறோம். ஒரு கோடு மட்டும் காட்டினால் நீங்க கர்ப்பம் இல்லை என்பதை குறிக்கிறது.

சிறுநீரை ஊற்றிய பிறகு ஐந்து நிமிடங்களுக்குள் முடிவை பார்க்கவேண்டும். தாமதமாக பார்க்கும்போது தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நெகட்டிவ் முடிவு என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சில டெஸ்டு அட்டைகளின் தரம் குறைவாக இருப்பதால் தவறான முடிவுகள் வரலாம். மற்றொரு ஹார்மோனும்( எல். ஹெச்) இந்த ஹெச் சி ஜி போலவே வினைபுரிந்து தவறான முடிவைத் தரலாம்.

சந்தேகமிருப்பின் ரத்தத்தில் பரிசோதனை செய்து கொள்வது சரியானது.

கருவை சோதிக்க அறிகுறிகள் ஏதேனும் இருக்கா?

கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்வதற்கு முன்பு கர்ப்பத்தின் சில அறிகுறிகளை (pregnancy starting symptoms) வைத்தும் கண்டறியலாம். கரு தன்னை பொருத்தும் போது புள்ளிகள் அல்லது இலேசான இரத்தப்போக்கு ஏற்படும்.

எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக இருப்பது போல் உணர்வீர்கள். வாசனை உணர்வு. உணவுப்பழக்கத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். இதற்கு முன் பிடிக்காத உணவுகளை இப்போது சாப்பிட தூண்டும். புளிப்பு உணவுகளை நாக்கு சுவைக்க தூண்டும்.

வயிற்றில் இழுக்கும் அல்லது தசைப்பிடிப்பு போன்ற விசித்திரமான உணர்வு உண்டாகலாம். மார்பகங்களில் மென்மை அல்லது வீக்கம் உண்டாகலாம். மார்பகத்தை தொடும் போது அல்லது உள்ளாடை அணியும் போது அசெளகரியத்தையும் வலியையும் உணர்வீர்கள்.

வாயில் மோசமான சுவை உணர்வு இருக்கும். முதல் 7 லிருந்து 10 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து நீங்க கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ளலாம். அல்லது துல்லியமான முடிவுக்கு மருத்துவரிடம் சென்று இரத்த பரிசோதனை மேற்கொள்ளலாம். 

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்