Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 5: இதெல்லாம் தான் குறைப்பிரசவம் ஏற்பட காரணமாம்..

Nandhinipriya Ganeshan April 25, 2022 & 15:30 [IST]
மகப்பேறும் மறுபிறப்பும் 5: இதெல்லாம் தான் குறைப்பிரசவம் ஏற்பட காரணமாம்..Representative Image.

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

Premature Birth in Tamil: கர்ப்பிணி பெண்களின் அதிகபட்ச ஆசையே குழந்தையை ஆரோக்கியமக பெற்றெடுக்க வேண்டும் என்பது தான். அதற்காகதான் முதல் மாதத்திலிருந்து 9 மாதங்கள் வரை பார்த்து பார்த்து பக்குவமாக ஒவ்வொருன்றையும் செய்வார்கள். உதாரணமாக, உறங்குவதிலும் அடி எடுத்து வைப்பதிலும் கூட கவனம் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..!.

இதுக்கெல்லாம் ஒரே காரணம் குழந்தையை 9 மாதம் முழுமையான வளர்ச்சியோடு ஆரோக்கியமான முறையில் பெற்று எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி சில நேரங்களில் தவறுக நடந்துவிடுகின்றன. அதில் ஒன்றுதான் குறைப்பிரசவம். இது எதனால் நிகழ்கிறது..? அறிகுறிகள் என்ன..? தவிர்க்கும் வழிகள் என்ன..? விரிவாக பார்க்கலாம்.

ஒரு பெண் கர்ப்பக்காலம் முழுமையும் முடிந்து குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு பிறகு வெளியேறும் நிலை தான் பிரசவம் என்று சொல்லப்படுகிறது. அது சுகப்பிரசவமாகவும் இருக்கலாம். சிசேரியனாகவும் இருக்கலாம். ஒரு முழுமையான பிரசவம் என்பது 38 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

விரைவில் கருத்தரிக்கணுமா? திருமணமான பெண்கள் ஒரு மாதம் தொடர்ந்து இந்த உணவுகளை சாப்பிடுங்க!.

குறைப்பிரசவம் (Premature Birth in Tamil) என்றால் என்ன?

சாதாரண கர்ப்பம் என்பது 40 வாரங்கள் வரை இருக்கலாம். அப்போது தான் கரு முழுமையான வளர்ச்சியை அடைந்து குழந்தையாக உருவம் பெற்று மண்ணிற்கு வரும். ஆனால், குறைப்பிரசவம் என்பது குழந்தையின் வளர்ச்சி முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்பு ஆகும். இது 37 வது வாரம் அல்லது அதற்கு முன்பு என எப்போது நிகழ்ந்தாலும் அதுவும் குறைப்பிரசவமாகவே கருதப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டி கட்டியா வெளிவருகிறதா...? பயப்பட வேண்டாம்.. இத ட்ரை பண்ணுங்க....

ஏனென்றால், 37 வாரத்திற்கு பிறகு தான் குழந்தையின் மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியை பெறுகின்றன. அதனால்தான் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சில உடல் நல பாதிப்புகளை சந்திக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கற்றல் குறைபாடு, உடல் குறைப்பாடு அல்லது நீண்ட கால உடல் நலப் பிரச்சனைகளையும் சந்திக்கின்றன. இதனால்தான் அவர்களுக்கு அதிக மருத்துவ கண்கானிப்பும் தேவைப்படுகிறது.

குறைப்பிரசவ அறிகுறிகள் (preterm birth symptoms in tamil) என்னென்ன...?

குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் இருந்தால் இதை மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். இதனால்தான், அவர்களுக்கு சில ஓய்வு, மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்கள். மேலும், குழந்தை குறைப்பிரசவத்தில் பிறப்பதாக இருந்தால் அந்த பெண் கர்ப்பகாலத்தில் சில அறிகுறிகளை எதிர்கொள்வார். அப்படி ஆரம்ப காலத்தில் என்னென்ன அறிகுறிகளை உணர்வீர்கள் என்று பார்க்கலாம். ஒரு சிலருக்கு இந்த அறிகுறி மோசமாகவும் இருக்கலாம். சிலருக்கு லேசாகவும் இருக்கலாம்.

 • குழந்தையின் உடலில் கொழுப்பு குறைவாக இருத்தல்
 • உடல் நீளம் மற்றும் தலை சுற்றளவில் மாற்றம்
 • மூச்சுத்திணறல்
 • உணவு சரியான முறையில் செல்லாதது
 • தலை மட்டும் பெரியதாக இருக்கும்
 • உணவு சரியான முறையில் செல்லாதது
 • கரு வளர்ச்சி கூர்மையாக இருக்கும்
 • குறைந்த உடல் வெப்பநிலை
 • உணவு சரியான முறையில் செல்லாதது
 • வயிற்று தொப்பை சிறிய அளவில் இருக்கும்

போன்ற அறிகுறிகளை முன் கூட்டியே உங்கள் ஸ்கேன் வழியாகவும், சில அறிகுறிகள் வழியாகவும் உணர முடியும்.

கர்ப்பிணிகள் இந்த பொருட்களை தெரியாமல் கூட சாப்பிட்டுறாதீங்க!.

குறைப்பிரசவம் எதனால் (Reasons to preterm birth) நிகழ்கிறது?

 • கர்ப்பப்பை கோளாறு
 • கர்ப்பகால உதிரப்போக்கு அதிகரித்தல்
 • ஒரு குழந்தைக்கு மேல் கரு உருவாதல்
 • கர்ப்பப்பை வாய் பகுதியில் பிரச்சனை
 • அதிக உடற்பயிற்சி
 • பிரசவ காலத்திற்கு முன்பே பனிக்குடம் உடைதல்
 • இரத்த சோகை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் அதிகரித்தல்
 • செயற்கை முறையில் கருத்தரிப்பு
 • சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல்
 • புகைப்பிடித்தல்
 • சிகிச்சைகளில் அலட்சியம் காட்டுதல்

போன்றவற்றால் குறைப்பிரசவம் நிகழ வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றன. ஆனால் இதுதான் முழுமையான காரணங்கள் என துல்லியமாக சொல்ல முடியாது. ஒவ்வொரு பெண்களின் உடல்நிலையை பொறுத்தது.

இதெல்லாம் கூட கேன்சர் ஆக இருக்கலாம்! எதையும் விட்டுடாதீங்க.

குறைப்பிரசவ குழந்தைக்கு உண்டாகும் எதிர்கால சிக்கல்கள்:

 • எடை குறைவாக இருக்கும்
 • மூச்சி விடுவதில் சிரமமாக இருக்கும்
 • உடல் வெப்பநிலையில் சமச்சீரின்மை
 • உடலில் கொழுப்பு குறைவாக இருக்கும்
 • சருமத்தில் மஞ்சள் அல்லது வெளிறிய நிற மாற்றம்
 • உணவு அலர்ஜி ஏற்படும்
 • அடிக்கடி சோர்வு, ஆக்டிவக இருக்கமாட்டார்கள்

போன்ற அறிகுறிகள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு, மருத்துவ ரீதியாகவும் சில சிக்கல்களை அனுபவிக்கலாம்.

 • மூளையில் அல்லது நுரையீரலில் இரத்த கசிவு
 • பாக்டீரியா இரத்த தொற்று
 • இரத்த சர்க்கரை அளவில் மாற்றம்
 • மூச்சுத்திணறல் நோய்க்குறி
 • இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருத்தல்
 • நிமோனியா தொற்று மற்றும் வீக்கம்
 • சுவாசக்கோளாறு

போன்றவையும் ஏற்படலாம்.

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க...

குறைப்பிரசவத்தை தடுக்கும் வழிமுறைகள்:

ஆரம்பத்திலிருந்தே சில விஷயங்கலை முறையாக பின்பற்றி வந்தால் குறைப்பிரசவத்தை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன,

 • கர்ப்பக்காலத்தில், முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல்
 • கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்
 • மருத்துவரை தவறாமல் ஒவ்வொரு மாதமும் பார்த்தல், அவருடைய பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றுதல்
 • தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீர் அருந்துவது
 • ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் சத்து தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது கருவில் குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது
 • மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருப்பின் அவற்றை தவிர்த்தல்
 • மேற்கூறிய அனைத்தையும் முறையாக பின்பற்றினால் குறைப்பிரசவத்தை தவிர்க்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்