Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

கர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்..

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 20:45 [IST]
கர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்..Representative Image.

என்னதான் உணவு, மருந்து, மாத்திரை என்று சாப்பிட்டாலும் கருவின் வளர்ச்சிக்கு கடவுளின் ஆசியும் அவசியம் தானே. அந்த வகையில், ஒரு கர்ப்பிணி பெண் தனது பத்து மாதம் வரை எந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

முதல் மாதம்:

முதல் மாதத்தில் கரு உருவாகும் காலம் என்பதால், இதற்கு காரக கிரகம் சுக்கிரன், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபுவனேஸ்வரி, இந்திராணி போன்ற தெய்வங்களை வணங்குவது சிறப்பு.

இரண்டாவது மாதம்:

இந்த மாதத்தில் கரு சற்று மென்மை தன்மையை பெற்றிருக்கும். செவ்வாய் அதிபதி. க்ஷேத்ர பாலகர்கள், ஸ்ரீமுருகன் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

மூன்றாவது மாதம்:

மூன்றாவது மாதத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு கை, கால்கள் உருவாகியிருக்கும். எனவே குரு அதிபதி. பிரம்மா, இந்திரன், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

நான்காவது மாதம்:

இந்த மாதத்தில் குழந்தைக்கு எலும்பு மற்றும் நரம்பு உருவாகத் தொடங்கும். எனவே, சூரியன் அதிபதி. சிவ பெருமானை வணங்கினால், கரு வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ஐந்தாவது மாதம்:

ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் உடலமைப்பு வளரத் தொடங்கும். அப்போ சந்திரன் அதிபதி. ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகௌரி அம்பாளை வணங்கலாம்.

ஆறாவது மாதம்:

ஆறாவது மாதத்தில் குழந்தையின் ரோமம், நகம் உருவாக தொடங்கும். சனி அதிபதி. ஸ்ரீபைரவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீவிநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.

ஏழாவது மாதம்:

இந்த மாதத்தில் குழந்தையின் பிராணன் உருவாகும். புதன் அதிபதி. எனவே, ஸ்ரீவிஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

எட்டாவது மாதம்:

எட்டாவது மாதத்தில் கருவின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, ஸ்ரீவிநாயகரை வழிபாடு செய்யலாம்.

ஒன்பதாவது மாதம்:

இந்த மாதத்தின் போது கரு முழுவதுமாக வளர்ச்சி அடைந்திருக்கும். சந்திரனே அதிபதி. துர்கை மற்றும் ஸ்ரீகௌரி அம்மனை வணங்க வேண்டும்.

பத்தாவது மாதம்:

பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் என்பதால், குழந்தை ஆத்ம பலம் பெறும். எனவே, இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவ பெருமானை வணங்க வேண்டும்.

குறிப்பு: இவை அனைத்தும் ஒரு நம்பிக்கைக்காக மட்டுமே.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்