Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்... | Pregnancy Ultrasound

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 19:00 [IST]
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்... | Pregnancy UltrasoundRepresentative Image.

கர்ப்பக்காலத்தின் போது ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் டெஸ்ட் மற்றும் ஸ்கென் செய்ய வேண்டியது அவசியம். இதை சரியான முறையில் கடைப்பித்தால் பிரசவக்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த வகையில், முதல் மூன்று மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய ஸ்கேன்களில் ஒன்றான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த ஸ்கேன் எத்தனை முறை செய்ய வேண்டும், இதன் விலை என்ன என்றும் விரிவாக பார்க்கலாம்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்:

ப்ரக்னன்சி அல்ட்ராசவுண்ட் என்பது கருவின் வளர்ச்சியை சரிபார்க்க கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் செய்யப்படும் ஒரு சோதனை ஆகும். ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்பத்தின் மூன்று ட்ரைமஸ்டரிலும் இந்த சோதனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கேன் செய்வதற்கு ஒவ்வொரு மூன்று மாதங்கள் மற்றும் விவரங்களைப் பொறுத்து ரூ. 500 முதல் ரூ. 3000 வரை (ultrasound pregnancy scan price) ஆகும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் பட்டியல்,

❖ முதல் ப்ரக்னன்சி ஸ்கேன் (Early Pregnancy Scan) – 1வது மூன்று மாதங்கள்

❖ அல்ட்ராசவுண்ட் NT/ NB ஸ்கேன் (Ultrasound NT/ NB Scan) - 1வது மூன்று மாதங்கள்

❖ அல்ட்ராசவுண்ட் நிலை 1 (Ultrasound Level 1) – 1வது மூன்று மாதங்கள் (அ) 2வது மூன்று மாதங்கள்

❖ அல்ட்ராசவுண்ட் நிலை 2 / டிஃபா ஸ்கேன் (Ultrasound Level 2 / Tiffa Scan) – 2வது மூன்று மாதங்கள்

❖ வளர்ச்சி ஸ்கேன் (Growth Scan) - 3வது மூன்று மாதங்கள்

❖ டாப்ளர் ப்ரக்னன்சி (Doppler Pregnancy) - 3வது மூன்று மாதங்கள்

❖ கரு எகோ (Fetal Echo) - 3வது மூன்று மாதங்கள்

முதல் ட்ரைமஸ்டரில் செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள்:

முதல் ப்ரக்னன்சி ஸ்கேன்

கர்ப்பத்தின் 6 முதல் 14 வது வாரத்தில் இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது. இதன் மூலம் பின்வரும் விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

❖ நீங்க தாயாக போகிறீர்கள் என்பதை உறுதி செய்யும். அதாவது நீங்க கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

❖ உங்களுடைய குழந்தை எப்போது பிறக்கும் என்பதை உறுதி செய்வார்கள்.

❖ வளரும் கருவின் இதயத் துடிப்பை சோதிப்பார்கள்.

❖ உங்களுடைய வயிற்றில் ஒரு கரு தான் வளர்கிறதா? அல்லது பல கரு இருக்கிறதா? என்பதை உறுதி செய்வார்கள்.

❖ கர்ப்பிணிப் பெண்ணுக்கு அசாதாரண இரத்தப்போக்கு அல்லது வலி இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்யப்படுகிறது.

❖ கரு ஆரோக்கியமாக இருக்கிறதா? ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்பதையும் சோதிப்பார்கள்.

❖ பொதுவாக, இந்த ஸ்கேன் செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை எடுக்கலாம்.

அல்ட்ராசவுண்ட் NT/ NB ஸ்கேன்

இந்த ஸ்கேன் கர்ப்பத்தின் 11 முதல் 14 வது மாதத்தில் செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில், குழந்தையின் அளவு 45 மிமீ முதல் 84 மிமீ வரை இருக்க வேண்டும். ந்த சோதனை பெரும்பாலும் இரட்டை மார்க்கர் சோதனையுடன் பரிந்துரைக்கப்படுகிறது. NT ஸ்கேன் மூலம் பின்வரும் விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

❖ இந்த ஸ்கேனின் மூலம் குழந்தையின் கழுத்துப் பகுதியில் சிண்ட்ரோம் வளர்ந்து இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.

❖ குழந்தைக்கு எந்த ஒரு பிறவி இதய நோய்யும் இல்லை என்பதை உறுதிபடுத்த முடியும்.

❖ குழந்தையில் VACTERAL சங்கம் எதுவும் உருவாகவில்லை.

❖ குழந்தை ஸ்மித்-லெமிலி-ஓபிட்ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியவும் செய்யப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்