Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Facts about Cat in Tamil: நீங்க கேட் லவ்வரா..? அழகான பூனைக்கிட்ட இவ்வளவு விஷயம் இருக்கா…? 

Nandhinipriya Ganeshan May 28, 2022 & 18:12 [IST]
Facts about Cat in Tamil: நீங்க கேட் லவ்வரா..? அழகான பூனைக்கிட்ட இவ்வளவு விஷயம் இருக்கா…? Representative Image.

Interesting Facts about Cats in Tamil: பூனைக்குட்டியை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். வீட்டில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளில் நாய்களுக்கு அடுத்து பூனையை தான் அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். ஏனெனில், பூனைக அமைதியானவை. பூனைகளில் பல வகை உண்டு. உண்மையை சொல்லப் போனால் பூனைகளை பெண்கள் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதை வீட்டு புலி என்றே கூறலாம். சரி இப்போது பூனைகளைப் பற்றிய சில வேடிக்கையான உண்மைகளை (fun facts about cats in tamil) தெரிந்துக் கொள்வோம். இது உண்மையில் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வாங்க பார்க்கலாம்..!

உலகின் பழமையான பூனை: 9,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான பூனை உங்களுக்குத் தெரியுமா! 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சைப்ரஸில் (cyprus) உள்ள ஒரு கல்லறையைக் கண்டுபிடிக்கும்போது இந்த பூனையை கண்டுபிடித்தார்களாம்.

தூங்கும் நேரம்: வீட்டில் நீங்க பூனைகளை வளர்த்து வந்திருந்தீர்கள் என்றால் தெரியும். எப்போதும் தூங்கிக் கொண்டே தான் இருக்குமாம். ஏனெனில், அவைகளுக்கு துங்குவது என்பது மிகவும் பிடித்தமான விஷயமாம். மேலும், பூனைகள் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 13 முதல் 16 மணி நேரம் தூங்குவதற்கு 70% நேரத்தை செலவிடுகின்றன. உண்மையை சொல்லப்போனால் கும்பகர்ணன் என்றே சொல்லலாம். 

என்னாது மேயரா? ஸ்டப்ஸ் என்ற ஒரு ஆரஞ்சு டேபி பூனை, அலாஸ்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் மேயராக 20 வருடங்கள் இருந்துள்ளது! இது உண்மையில் உங்களால் நம்ப முடிகிறாதா! ஆனால் அது தான் உண்மை. இன்னொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், உள்ளூர் மக்களாலும் சுற்றுலாப் பயணிகளாலும் விரும்பப்பட்டதால், ஸ்டப்ஸ் போட்டியின்றி பல தேர்தல்களை (interesting facts about cats) ஜெயித்துள்ளதாம். 

விண்வெளிக்கு சென்ற முதல் பூனை: ஆஸ்ட்ரோகாட் என்று அழைக்கப்படும் ஃபெலிசிட் பூனை அக்டோபர் 18, 1963 ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்று சாதனைப்படைத்தது. விண்வெளிக்கு முதல் பூனை என்ற பெருமையும் இதற்கு உண்டு. 

உலகின் மிக வயதான பூனை: க்ரீம் பஃப் என்ற பூனை 38 வயது 3 நாட்கள் வாழ்ந்துள்ளதாம். இதுதான் உலகின் மிகவும் வயதான பூனை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. பிறப்பு: ஆகஸ்ட் 3, 1967. 

வீட்டுப் பூனையின் வேகம்: ஒரு வீட்டுப் பூனை மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடக்கூடியது . இது ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டை கூட 200 மீட்டர் ஓட்டத்தில்  முறியடிக்க கூடியது. 

உலகின் பணக்கார பூனை: மனிதர்களில் பணக்காரர்கள் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் பூனையில் பணக்கார பூனையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் இருக்கு. அதன் பெயர் தான் பிளாக்கி, இதுக்கு 7 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருந்ததாம். இது கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. ஒரு கோடீஸ்வர உரிமையாளருடியயை குடும்பம் அந்த பூனையை பராமரிக்க மறுத்ததால் இது நடந்துள்ளது.

4,5,6? நல்லா உற்றுப் பாருங்க... இந்தப் படத்துல எத்தனை விலங்குகள்? முடிஞ்சா கண்டுபிடிங்க?  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்