Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

கொத்து கொத்தாக மற்றும் கருப்பாக முடி வளர கறிவேப்பிலை எண்ணெய்..! வீட்டிலேயே இப்படி செய்யுங்க… | How to Make Curry Leaves Oil for Hair in Tamil

Gowthami Subramani Updated:
கொத்து கொத்தாக மற்றும் கருப்பாக முடி வளர கறிவேப்பிலை எண்ணெய்..! வீட்டிலேயே இப்படி செய்யுங்க… | How to Make Curry Leaves Oil for Hair in TamilRepresentative Image.

பெண்களுக்கு பொதுவாக முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பது மிகவும் விருப்பமான ஒன்று. ஆனால், இன்று நாம் உண்ணும் சில உணவுப் பொருள்கள், வாழ்க்கை முறைகள் எல்லாம் நம் உடலுக்கு கேடு தருபவையாகவே உள்ளன. மன அழுத்தம் இருப்பதால் கூட முடி உதிர்வு ஏற்படும் எனக் கூறுவர். இது போல எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், முடி உதிர்வுக்கான தீர்வும் நிறைய இருக்கிறது. அந்த வகையில், கறிவேப்பிலை மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் முடி கருப்பாகவும், கொத்து கொத்தாகவும் வளர வைக்க உதவும் கறிவேப்பிலை எண்ணெய் தயாரிப்பது எப்படி? என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

கொத்து கொத்தாக மற்றும் கருப்பாக முடி வளர கறிவேப்பிலை எண்ணெய்..! வீட்டிலேயே இப்படி செய்யுங்க… | How to Make Curry Leaves Oil for Hair in TamilRepresentative Image

ஏன் கறிவேப்பிலை எண்ணெய் | Karuveppilai Oil for Hair Growth in Tamil

முடி அடர்த்தியாக வளர்வதற்கு, முதலில் தலையில் உஷ்ணம் இருத்தல் கூடாது. உஷ்ணம் அதிகமாக இருந்தால் முடி உதிர்வதும் அதிகமாகும். எனவே, தான் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக எண்ணெய் தடவி வருகிறோம். அவற்றிலும் ஒரு சிலர் எண்ணெயே தடவ மாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு விரைவாகவே முடி கொட்டத் துவங்கும். அதே போல, நாளுக்கு நாள் கருமையை இழந்து நரை முடி தோன்றக் கூடும். எனவே, எண்ணெயை கட்டாயம் தலைக்குத் தேய்க்க வேண்டும். எண்ணெய் உபயோகிப்பதிலும், வேதிப்பொருள்கள் கலந்து விற்கும் எண்ணெய்களை வாங்கி தேய்க்கக் கூடாது. ஈரப்பதம் இல்லாமல், உஷ்ணத்தைக் குறைக்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒன்றே போதும். அடுத்ததாக முடி கருப்பாகவும், நரைமுடி போவதற்கும் நாம் கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

கொத்து கொத்தாக மற்றும் கருப்பாக முடி வளர கறிவேப்பிலை எண்ணெய்..! வீட்டிலேயே இப்படி செய்யுங்க… | How to Make Curry Leaves Oil for Hair in TamilRepresentative Image

கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கத் தேவையானவை

✤ தூய்மையான கறிவேப்பிலை – 1 கைப்பிடி

✤ வெந்தயம் – 2 டீஸ்பூன்

✤ தேங்காய் எண்ணெய் (சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது இல்லையெனில் சாதாரண தேங்காய் எண்ணெயை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

கொத்து கொத்தாக மற்றும் கருப்பாக முடி வளர கறிவேப்பிலை எண்ணெய்..! வீட்டிலேயே இப்படி செய்யுங்க… | How to Make Curry Leaves Oil for Hair in TamilRepresentative Image

கருவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறை

✤ முதலில், ஒரு கைப்பிடி அளவு நிறைய தூய்மையான கறிவேப்பிலைகளைக் கொத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ இதனை மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

✤ இத்துடன், 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.

✤ இவ்வாறு வெந்தயத்தையும், கறிவேப்பிலையையும் நன்கு நைஸாக வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.

✤ பிறகு, 100 மிலி அளவு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெயை இரும்பு வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

✤ அதன் பின் எண்ணெய் அடுப்பில் கொதித்து வரும் போது, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் பவுடரை சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும்.

✤ இவ்வாறு எண்ணெயில் போட்ட உடனே, கறிவேப்பிலையானது பொரியும் சத்தம் கேட்கும். அந்த சமயத்தில் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கசிந்து விடும்.

✤ இவ்வாறு பத்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டால், அதன் சலசலப்பு அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். அதுவரை பொறுமையாக கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து அப்படியே ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

✤ இவ்வாறு 24 மணி நேரம் கழித்து நன்றாக ஆறிய பிறகு, திப்பிகள் அனைத்தையும் நீங்குமாறு நன்கு வடிகட்ட வேண்டும்.

✤ இந்த எண்ணெயை தினமும் லேசாக தலையில் சேர்த்து மசாஜ் செய்து வந்தாலே போதும். முடி கருப்பு நிறத்தில் கொத்தாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

(இதில் கறிவேப்பிலையானது முடிக்கு கருமை நிறத்தை அளிக்கவும், வெந்தயம் உடல் உஷ்ணத்தைத் தணித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்