Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி | Hairstyle for men's face shape

Vaishnavi Subramani Updated:
ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி | Hairstyle for men's face shapeRepresentative Image.

ஆண்கள் பெரும்பாலும் முகம் மற்றும் கேசத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் காட்டுவார்கள். இப்பொழுது ஹேர்ஸ்டைல் என்பது மிகவும் ட்ரண்டிங் ஆக உள்ளது. பல ஆண்கள் பலவிதமான ஹேர்ஸ்டைல் செய்வார்கள் ஆனால் அவர்கள் முகத்திற்கும் ஹேர்ஸ்டைலைக்கும் செட் ஆகாமல் இருக்கும். அதனை பார்த்துத் திரும்ப வேறு ஒரு ஹேர்ஸ்டைல் மாற்றுவார்கள்.அதுவும் முகத்திற்கு அழகாக இருக்காது. அதனால் இந்த பதிவில் ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்வுசெய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி | Hairstyle for men's face shapeRepresentative Image

ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்வு செய்வதற்கான வழிகள்

✤  ஆண்கள் பொதுவாகப் பிடித்த ஹேர்ஸ்டைலை தேர்வுசெய்வதை விட அவர்கள் முகத்தின் வடிவமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டு, எந்த மாதிரி ஹேர்ஸ்டைல் செய்தால் ஹேண்ட்ஸம் ஆகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதற்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.

✤  முதலில் உங்கள் முகம் வடிவமைப்பு மற்றும் முடியின் நீளம் மற்றும் அகலம் அத்துடன் தாடியின் அமைப்பு ஆகியவை வைத்து தான்ஹேர்ஸ்டைலை முடிவு செய்ய முடியும்.

✤  அத்துடன் முடிக்குப் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் ஹேர் ஜெல் போன்றவை இதிலும் கூட அவர்களின் முடிக்கு ஏற்றவை தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும்.

✤  ஹேர்கட் செய்வதற்கு, முதலில் தலையில் இரட்டைச் சுழி இருந்தால் அவர்களுக்கு நடுத்தரமாக முடி இருப்பது போல் முடி வெட்ட வேண்டும். அதற்குப் பதிலாக ஷார்ட்டாக கட் செய்யலாம். இல்லை என்றால் சுழி இருக்கும் இடத்தில் மட்டும் முடி இல்லாமல் மற்ற இடங்களில் முடி தூக்கிக்கொண்டு இருக்கும்.

ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி | Hairstyle for men's face shapeRepresentative Image

✤ அடுத்தாக முக அமைப்பை வைத்து முடி வெட்டுவது நன்றாக இருக்கும். அதில் முகம் முக்கோண வடிவிலிருந்தால் அதற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்வுசெய்து கொள்ள வேண்டும். சதுர வடிவில் முகம் இருந்தால் அந்த முடியுடன் சேர்த்து தாடியும் பராமரித்து வைத்து கொண்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

✤ முன்நெற்றியில் முடி குறைவாக இருந்து மற்றும் சுழி இருந்தால், அந்த ஹேர்கட் செய்யும் போது முன்பகுதியில் உள்ள முடியைக் குறைவாக வெட்டுவது தான் சரியாக இருக்கும்.

✤ முகம் வட்ட வடிவில் இருந்து, தாடை பெரிதாக இருந்தால் இவர்கள் அதிகளவில் முடி வெட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் ஷாட் ஹேர்கட் செய்வதைத் தவிர்க்கவும்.

✤ நீள்வட்ட முகமாக இருந்தால் அவர்கள் முகத்தின் நெற்றி பகுதியில் முடி விழுவது போல் வெட்டிக் கொள்ளலாம்.

✤ சிறிய முகமாக இருந்தால் ஹேர்கட் செய்வது “ஸ்பைக்”ஹேர்ஸ்டைல் போல் வெட்டி கொண்டு முகம் முழுவதுமாக தெரிவது போல் பின்னோக்கி சீவிக் கொண்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

✤ ஹேர்ஸ்டைல் என்பது குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு பிறகு,ஹேர்டைல் மாற்ற வேண்டும்.

பொதுவாக 20 முதல் 37 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக ஹேர்கட் செய்ய வேண்டும்.

✤ ஹேர்ஸ்டைல் பராமரிப்பது போலவே ஹேர்ருக்கு பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல் சொல்யூஷன் போன்றவை முடிக்கு ஏற்றதாகப் பார்த்து வாங்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்