அதிகளவில் வெயிலில் வேலை செய்வதாலும் மற்றும் அதிகமாக வெளியில் சென்றாலும், முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கருமையாகவும் மாறும். முகம் பொலிவு இழந்து காணப்படுவதினால் மற்றும் நெற்றியில், வாயின் ஓரங்கள் என முகத்தில் பல பகுதிகளில் சுருக்கங்கள் வரும். அதிகமாக வெயிலில் விளையாடுவதாலும் முகத்தில் கருமைத்தன்மை அதிகமாக வரும் மற்றும் முகத்தில் சுருக்கங்கள் எளிதில் வரும். இது போன்ற சுருக்கங்களை எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என கவலைப்படுகிறீர்களா. இனி இந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே எப்படி இந்த சுருங்கலைச் சரிசெய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
✤ கற்றாழை ஜெல் – 2டீஸ்பூன்
✤ சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு -2 பழம்
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் 2டீஸ்பூன் அளவிற்குக் கற்றாழை ஜெல் அத்துடன் ஆரஞ்சு பழத்தில் பிழிந்து அதில் வரும் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும்.
✤ முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். முகம் முழுவதுமாக சுருக்கங்கள் இருக்கும் இடங்களில் கலக்கிய க்ரீமை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
✤ அதை 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். அதன் பின் தண்ணீரில் முகத்தை நன்றாகக் கழுவவும். இதே போன்று வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.
✤ இப்படிச் செய்தால் முகம் பொலிவாகவும் மற்றும் அழகாகவும், சுருக்கம் இல்லாமலும் மாறும். இதை நீங்கள் முகம் அல்லது கை,கால் போன்ற பகுதிகளும் செய்யலாம்.
✤ வீட்டில் செய்வதற்கு நேரம் இல்லை என்றால் கடைகளில் விற்கும் ஹயாலுரானிக் ஆசிட் சீரம் வாங்கியும் பயன்படுத்தலாம்.
✤ இதை வாங்கி இரவு நேரங்களில் முகம் மற்றும் கை கால் எனச் சுருக்கங்கள் மற்றும் கோடு போன்று இருக்கும் இடங்களில் தேய்த்துப் பயன்படுத்தலாம்.
✤ இதைக் காலையில் எழுந்து கழுவினால் முகம் பொலிவாகவும், சுருக்கங்கள் நீங்கியும் மற்றும் பளப்பாளப்பாகவும் இருக்கும்.இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
✤ மற்றொரு முறை, கொலாஜன் சீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த சுருக்கங்கள் மற்றும் முகத்தில் விழும் சிறுசிறு கோடுகள் அனைத்தையும் இதன் மூலம் நீக்கலாம்.
✤ இந்த ஷீட்டை முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் முகத்தின் அளவிற்கு ஏற்ப ஷீட்டை வெட்டி முகத்தில் வைத்துக் கொள்ளவும்.
✤ அதன் பின், நீங்கள் வீட்டில் செய்த கற்றாழை கலவையை எடுத்து அதன் மேல் அப்ளை செய்யவும். இதை அரை மணி நேரம் அப்படியே காய விடவும்.
✤ அதற்குப் பின், முகத்தில் உள்ள அந்த ஷீட்டை எடுத்து முகத்தைக் கழுவினால் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் மற்றும் கோடுகள் என அனைத்தும் நீங்கி முக அழகாகவும், பொலிவுடனும் மாறுவதற்கு உதவும்.
✤ இந்த முறைகளைச் செய்வதன் மூலம் முகம் மிகவும் பளப்பாளப்பாகவும், பொலிவுடனும், அழகாகவும், சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு உதவும். இந்த முறைகளை வாரத்தில் இரண்டு முறை அல்லது முகத்தில் அதிகமாகச் சுருக்கங்கள் இருந்தால் நீங்கள் இந்த முறையை மூன்று அல்லது நான்கு முறையும் செய்யலாம்.
குறிப்பு: இந்த முறை முதலில் கைகளில் அப்ளை செய்து அரை மணிநேரம் வைத்து எடுத்த பிறகு, அடுத்த 24 மணிநேரத்தில் அரிப்புகள் மற்றும் சிவப்பாக மாறுவது போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால் மட்டும் இதை முகத்தில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் இதைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…