Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருவோணம் திருநாள் 2023 வந்தல்லோ.. ஓணம் பண்டிகையில் அத்தப்பூ கோலம் போடுவது எதற்கு? | Onam Pookalam Designs 2023

Nandhinipriya Ganeshan August 21, 2023 & 13:00 [IST]
திருவோணம் திருநாள் 2023 வந்தல்லோ.. ஓணம் பண்டிகையில் அத்தப்பூ கோலம் போடுவது எதற்கு? | Onam Pookalam Designs 2023Representative Image.

Big Onam Pookalam Designs 2023: கோலம் என்றாலே தனிக் கலைத்தான். அதிலும் விதவிதமான பூக்களாலே போடப்படும் அத்தப்பூ கோலம் ரொம்பவே ஸ்பெஷல். அந்தவகையில், கேரள மக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையான ஓணம் பண்டிகையில் போடப்படும் அத்தப்பூ கோலங்களுக்கு தனி சிறப்புண்டு. 

கேரளத்து மன்னரான மகாபலி அரசரை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்த திருவோணம் பண்டிகை. இவ்வாண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

Most Read: ஓணம் ஸ்பெஷல்... லேட்டஸ்ட் அத்தப்பூ கோலங்கள்...

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையில், பெண்கள் பாரம்பரிய உடைய கசவு புடவையையும், ஆண்கள் வேஷ்ட்டி சட்டையையும் அணிந்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக்களால் கோலம் போட்டு, சத்யா விருந்து படைத்து வழிபாடு செய்து வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். 

இந்த பண்டிகையின் போது அத்தப்பூ கோலம் இடப்படுவதற்கான காரணம் தெரியுமா? பொதுவாக, ஓணம் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும். இம்மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாகவும் இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கோலங்கள்..

பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் முதல் நாளே அத்தப்பூ கோலத்துடன் தான் தொடங்கும். அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று மற்றும் பத்தாவது நாள் பத்து வகையான பூக்களால் கோலத்தை பெண்கள் அழகுப்படுத்துவார்கள்.

திருவிழாவின் கடைசி நாளான திருவோணத்தன்று மட்டும் கோலத்தின் அளவு பெரியதாக இருக்கும். இந்த அத்தப்பூ கோலமிடுவதற்கு காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில், இவ்வாண்டு புதுப்புது டிசைன்ஸ்களை கொண்ட அத்தப்பூ கோலங்களால் உங்க வீட்டை அழகரியுங்கள். 

திருவோணம் திருநாள் 2023 வந்தல்லோ.. ஓணம் பண்டிகையில் அத்தப்பூ கோலம் போடுவது எதற்கு? | Onam Pookalam Designs 2023Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்