Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை போக்கும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!!

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 14:20 [IST]
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை போக்கும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!!Representative Image.

How to Get Rid of Vaginal Itching Naturally at Home in Tamil: பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட முக்கிய காரணம் பூஞ்சைத் தொற்றுகள். அதுமட்டுமல்லாமல், அதிகளவில் கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை உபயோகிப்படுத்தும்போது அதில் இருக்கும் ஆல்காஹாலின் காரணமாக பிறப்புறுப்பில் எரிச்சல், வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட நாப்கின் பயன்படுத்துவதும் ஒரு மிகப்பெரிய காரணமாகும். சில சமயங்களில் யோனி பகுதியில் இருக்கும் முடிகளை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் வேக்சிங், சேவிங், லேசர் சிகிச்சை முறைகளும் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தலாம். 

Also Read: பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்..

சில பயனுள்ள வீட்டு குறிப்புகளை நீங்கள் முதல் முயற்சி செய்து பார்ப்பதன் மூலம் இந்த அரிப்பை எளிதில் நீக்கிவிடலாம். இருப்பினும், அரிப்பு அதிகமானால் உடனடியாக டாக்டரை பார்ப்பது முக்கியமானது. ஏனென்றால், அரிப்பு, எரிச்சல் போன்றவை மற்ற நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவேல், சரியான நேரத்தில் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். சரி இப்போது யோனி அரிப்பை போக்கும் சில பயனுள்ள வீட்டு குறிப்பிகளை பற்றி பார்க்கலாம். 

Also Read: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்குவது எப்படி? 

தயிர்

ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த தயிர் வெஜைனாவில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. இது கேன்டிடா செல்களை அழிப்பதோடு அரிப்பெடுக்கும் உணர்விலிருந்தும் நிவாரணமளிக்கும். இதற்கு 1 டீஸ்பூன் தேனுடன் 2-3 டீஸ்பூன் தயிரை சேர்த்து அந்தரங்கப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த அரிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம்.

Also Read: நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால் ஆபத்தா?

வேப்பிலை

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீர் ஆறியதும் பிறப்புறுப்பை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறப்பில் இருக்கும் கிருமிகள், தொற்றுகள் அழியும். அரிப்பிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். அல்லது வேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலும் கருப்பை தொற்றுகள் நீங்கும். 

Also Read: மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?

பேக்கிங் சோடா

ஆண்டிஃபங்கல் குணம் நிறைந்த பேக்கிங் சோடாவிற்கு ஈஸ்ட் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சரும நோய்களுக்கும் சிகிச்சையளிக்கிறது. இரண்டு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து அந்தரங்க உறுப்பை கழுவி வர வெஜைனா அரிப்பில் இருந்து உடனடியாக குணமடையலாம். 

Also Read: ஏழே நாட்களில் வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..

தேங்காய் எண்ணெய்

அரிப்பு ஏற்படும் போது, தினமும் இரவில் பிறப்புறுப்பை நன்றாக கழுவிவிட்டு பிறப்புறுப்பிலும் அதனைச்சுற்றி இருக்கும் பகுதியிலும் சுத்தமான தேங்காய் எண்ணெயை தடவி, சில நிமடங்கள் நன்கு மசாஜ் செய்துவிட்டு படுங்கள். மறுநாள் காலையில், குளிக்கும் போது வாசனையற்ற சோப் போட்டு வெந்நீர் கொண்டு கழுவினால் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும். இதை அரிப்பு ஏற்படும்போது மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. சாதாரணமாகவே தினமும் இவ்வாறு செய்யலாம். இதனால், பிறப்புறுப்பில் தொற்று ஏற்படாமலும், pH லெவலை சமநிலையிலும் வைத்துக்கொள்ளலாம். 

Also Read: பிறப்புறுப்பை சுத்தமா வைத்துக்கொள்ள ஹோம் மேட் வெஜினல் வாஷ்..

அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கலாம்.

வாசனை நிறைந்த சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

அதற்கு பதிலாக வாசனையற்ற கெமிக்கல் இல்லாத சோப்களை பயன்படுத்தலாம்.

பிறப்புறுப்பில் வியர்வை ஏற்படாதவாறு காற்றோட்டமான ஆடைகளை அணியலாம்.

நாப்கின் பயன்படுத்தும் போது 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றிவிட முயற்சிக்க வேண்டும்.

ஷேவிங் செய்யாமல் டிரிம்மர் வாங்கி பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் தண்ணீர் கொண்டு கழுவுவது சிறந்தது. 

தினமும் 3 லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும்.

Also Read: மாதவிடாய் வலியால் அவதிபடுறீங்களா? இத ட்ரை பண்ணி பாருங்க..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்