Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Samosa Seivathu Eppadi in Tamil: மொறு மொறு சமோசா இப்படி செஞ்சி பாருங்க...!!

Nandhinipriya Ganeshan September 04, 2022 & 14:20 [IST]
Samosa Seivathu Eppadi in Tamil: மொறு மொறு சமோசா இப்படி செஞ்சி பாருங்க...!!Representative Image.

Samosa Seivathu Eppadi in Tamil: சமோசாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமோசாவின் சுவை அனைவரது மனதிலும் ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. பொதுவாக, சமோசா என்றாலே கடைகளில் போய் வாங்கி சாப்பிடுவோம். சில சமயங்களில், ஆறிப்போய் இருக்கும், பழசாக கூட இருக்கலாம். இதனால் சிலருக்கு ஃபுட் பாய்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க வீட்டிலேயே சுத்தமாகவும் சூடாகவும் செய்து சாப்பிடலாமே. போண்டா, பஜ்ஜி, வடை போன்று இதை செய்வதும் சுலபமே. இதோ ரெசிபி. 

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: மழைக்கு சூடா மட்டன் கீமா சமோசா.. ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

மைதா - 2 கப்

கோதுமை மாவு - 1 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

சோம்பு - சிறிதளவு

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?

செய்முறை:

முதலில் கோதுமை மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். இந்த மாவை 10 நிமிடம் ஊறவைக்கவும்.

இப்போது, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து மசாலாத்தூள்கள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு மீண்டும் வதக்கக் கொள்ளவும்.

இப்போது, அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை பிசைந்து விட்டு கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சமோசாவிற்கு மசாலா தயார். 

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. 

நாம் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தொட்டு முக்கோண வடிவில் உருட்டிக் கொள்ளவும். 

இப்போது அந்த மாவின் நடுவே சமோசா மசாலாவை வைத்து மடித்துக்கொள்ள கொள்ளவும். இப்படி எல்லா மாவையும் செய்துக்கொள்ளுங்கள்.

சுவையான நாட்டுக்கோழி பிரியாணி குழையாமல் செய்வது எப்படி? 

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதித்தவுடன், மடித்த சமோசாவை போட்டு எடுத்தால் சுவையான சமோசா ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்