Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Kulukki Sarbath in Tamil: கொளுத்தும் வெயிலுக்கு நல்லா ஜில்லுனு ஒரு கூல்டிரிங்.. கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்..!!

Nandhinipriya Ganeshan July 25, 2022 & 10:35 [IST]
How to Make Kulukki Sarbath in Tamil: கொளுத்தும் வெயிலுக்கு நல்லா ஜில்லுனு ஒரு கூல்டிரிங்.. கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்..!!Representative Image.

How to Make Kulukki Sarbath in Tamil: இந்த வெயில் காலம் வந்துவிட்டாலே நாக்கு ஜில்லுனு இருக்குற திரவ உணவுகளை தான் தேடுகிறது. அதற்காக, பலரும் இளநீர், கரும்பு ஜூஸ், வெள்ளரி ஜூஸ், மற்றும் ரசாயன ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி வாங்கியோ அல்லது வீட்டிலே செய்து குடிக்கிறார்கள். அதெல்லாம் குடித்து குடித்து கண்டிப்பாக போரடித்திருக்கும். கொஞ்சம் வித்தியாசமா இப்படி செய்து குடித்து பாருங்க. குலுக்கி சர்பத், இது கேரளாவில் மிகவும் ஃபேமஸ். இதுக்காக கேரளாவுக்கு போக வேண்டியது இல்லை. வீட்டிலேயே செய்யலாம். இதோ ரெசிபி..

தேவையான பொருட்கள்:

சப்ஜா விதை – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை – ½

ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு

சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

பொதினா இலை – 6

உப்பு தேவைக்கேற்ப

தண்ணீர் தேவைக்கேற்ப

ஐஸ் க்யூப்ஸ் – 3

Most Read: கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் ரகசியம் இதுதானா? அட... இவ்வளவு நாளா தெரியாமபோச்சே…!!

செய்முறை:

முதலில் சப்ஜா விதைகளை ஒரு பவுளில் போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்க ஊற வைக்கவும்.

அடுத்து பச்சை மிளகாயை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ரொம்ப காரம் வேண்டாம் என்றால் விதைகளை நீக்கிவிடலாம்.

Most Read: ஆல் டைம் ஃபேவரட்! ரோட்டுக்கடை பானிபூரி வீட்டிலேயே செய்யலாம்.. அதுவும் இவ்வளவு ஈஸியாக…!!

பிறகு, அரை எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வட்டவடிவில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு பெரிய கிளாஸை எடுத்து அதில் வெட்டி வைத்த பச்சை மிளகாய், எலுமிச்சை துண்டு, சப்ஜா விதை, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை, பொதினா இலை மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

Most Read: நாவில் எச்சில் ஊற வைக்கும் மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா… இனி வீட்டிலேயே செய்யலாம்..

பிறகு, அந்த கிளாஸ் முழுவதும் நிரம்பும் அளவிற்கு ஜில் வாட்டரை ஊற்றிக் கொள்ளவும். இதை மற்றொரு கிளாஸில் மாற்றி மாற்றி கலக்கிக் கொண்டாலும் சரி, ஷேக்கர் இருந்தால் அதில் ஊற்றி கலந்துக் கொண்டாலும் சரி.

அவ்வளவு தான் கேரளாவின் ஸ்பெஷல் குலுக்கி சர்பத் ரெடி..!!

Tags:

Kulukki sarbath recipe in tamil | How to make kerala special kulukki sarbath | Kulukki sarbath ingredients | How to make kulukki sarbath | How to make kulukki sarbath in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்