Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at Home

Gowthami Subramani Updated:
இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image.

தைப் பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என தமிழர்களின் தலையாய பண்டிகையாக விளங்கும் தைப் பொங்கல் பண்டிகைத் திருநாளைப் பற்றி இங்குக் காணலாம். பொதுவாக பண்டிகை என்றாலே, உறவினர்கள், நண்பர்கள் ஒன்று கூடி விழாவைச் சிறப்பாக விருந்து வைத்து கொண்டாடுவர். அதிலும் பொங்கல் விழா என்றால் சொல்லவே தேவையில்லை. பொங்கல் வைத்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். இத்தகைய சிறப்பு மிகுந்த பொங்கல் பண்டிகையில் உங்கள் வீட்டை அலங்கரிப்பதும் முக்கியமான ஒன்று தானே. சரி இதில், பொங்கல் பண்டிகையில் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்பதை இதில் பார்க்கலாம்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

பொங்கல் கொண்டாட்டங்கள்

பொங்கல் பண்டிகையில், அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்துவது பொதுவாக பச்சை நிறத்தி இருக்கும். ஏனெனில், பொங்கல் பண்டிகையை தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படும் விவசாயத்தைக் குறிப்பவையாக உள்ளது. அதன் படி, மா இலைகள் வாழை இலைகள், கரும்பு குச்சிகள் போன்ற அனைத்து அறுவடை பொருள்களும் பச்சை நிறத்தைக் குறிக்கிறது. பொங்கல் விழாக்காலங்களில் அலங்காரத்திலும் பங்கு வகிப்பது என்றால் அது கரும்பு தான். இந்த பருவத்தில் முதன்மை அறுவடையாக கரும்பு உள்ளது.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

பொங்கல் வீட்டு அலங்காரக் குறிப்புகள்

எல்லோரும் மாடி, மாளிகை என பெரிய பங்களாக்கள்ல் வாழ்வதில்லை. சிறு குடிசை, கூரை வீடுகளாக இருந்தாலும், உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரத்தைக் கவர்ச்சிகரமானதாக செய்யலாம். பொங்கல் கொண்டாடுவதற்கு அதிகப்படியான இடம் தேவையில்லை. நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் பொருள்களை வைத்தே வீட்டை அலங்காரப்படுத்தலாம்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

ரங்கோலி கோலங்கள்

எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் அல்லது சாதாரண நாள்களிலும் கூட முதல் உன்னதமான மற்றும் பிரகாசமான வெளிப்புறத் தோற்றத்தை உருவாக்க கோலங்கள் முதன்மையாகக் கருதப்படுகிறது. இது ஆன்மீக ரீதியாகவும் நல்ல பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொங்கல் தினத்தன்று முதன்மை வேலையாக நாம் செய்வது வீட்டு வாசலில் கோலமிடுவது ஆகும். அதற்கு கலர் வண்ணமிட்டு, பூக்களால் அலங்கரிக்கலாம். இது மேலும் வீட்டிற்குச் சிறப்பைத் தரும்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

பச்சை அலங்காரம்

அடுத்ததாக, பொங்கல் பண்டிகையின் முக்கிய காரணமாக விளங்கும் அறுவடையைக் குறிக்கும் பச்சை இலை அலங்காரத்தைப் பற்றிக் காணலாம். இதில், வீட்டின் வாசலில் மா இலைகளைத் தொங்கவிடுவது மகிழ்ச்சியைத் தரும். மா இலைகளை வீட்டு வாசலில் உள்ள கதவுகளில் தொங்க விடுவது, உற்சாகத்தைத் தரக்கூடியதாக அமையும்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

கரும்பு வைத்தல்

வீட்டின் வாசலை அலங்கரிக்க செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் வாசலில் கரும்பு கட்டி வைத்தல். வீட்டு வாசலில் இரு புறங்களிலும், முக்கோண அமைப்பில் இருக்குமாறு கரும்புகளை கட்டி விடவும். இது பொங்கல் பண்டிகைக்கு உரித்தான கரும்பு அறுவடை என்பதைக் காட்டுகிறது.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

பானை அலங்காரம்

பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வரும் மற்றொன்று பொங்கல் பானை தான். இதனை வீடுகளில் எப்படி அலங்கரிக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழும். நமது பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வகையில், வீட்டில் அலங்காரம் செய்து வைக்கப்பட்ட சில பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கவும். இதில், அரிசி, பால், மற்றும் வெல்லம் போன்றவற்றைச் சேகரித்துக் கொள்ளலாம். இது வீட்டில் செல்வத்தைச் சேர்ப்பதாக அமையும்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

வீட்டு ஓவியம்

பொதுவாக வீடுகளின் சுவர்களில் ரங்கோலி கோலம் டிசைன்களுடன் வடிவமைத்திருப்பது பார்த்திருப்பீர்கள். இவை அனைத்துமே தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையிலேயே அமைகிறது. அதன் படி, இந்தப் பொங்கல் பண்டிகையில் வீட்டின் சுவர்களில் ரங்கோலி கோலங்களை துடிதுடிப்பான வண்ணப்பூச்சுகளால் வரைவது சிறப்பைத் தரும். இதற்கு, சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை என இரண்டு வண்ண கலவை சுவர்களைப் பிரமிக்க வைக்கும்.

இந்த பொங்கலுக்கு உங்க வீட்ட இப்படி டெக்கரேட் பண்ணுங்க.! | Pongal Decoration Ideas at HomeRepresentative Image

வீடுகளில் மட்டுமல்லாமல், அலுவலகம், பள்ளி என அனைத்து இடங்களிலும் இது போல அலங்கரித்து பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக வரவேற்கலாம். இது போன்ற அலங்கரிப்புகளுடன், பண்டிகைத் தினத்தில் வீட்டை அலங்கரித்து உறவினர்களை அழைத்து பொங்கல் பண்டிகையை இனிமையாகக் கொண்டாடுவோம். இது பண்டிகை தினத்தில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரக்கூடியதாக அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்