Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Coconut Flour Chocolate Brownies: வித்தியாசமான சுவையில் சாக்லேட் ப்ரவுனி செய்யலாம் வாங்க...

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 15:00 [IST]
Coconut Flour Chocolate Brownies: வித்தியாசமான சுவையில் சாக்லேட் ப்ரவுனி செய்யலாம் வாங்க...Representative Image.

Coconut Flour Brownies Recipe in Tamil: சாக்லேட் ப்ரவுனி என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதனால், நம்மில் பலரும் அவ்வப்போது பேக்கரிக்கு சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால், சாக்லேட் ப்ரவுனியை நாம் வீட்டிலேயே செய்ய நினைத்தாலும் அதற்கு ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும் என்று விட்டுவிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் குக்கரே போதும் மென்மையான வித்தியாசமான சுவையில் சாக்லேட் ப்ரவுனி ஈசியாக செய்யலாம். இது இன்னொரு ஸ்பெஷலே தேங்காய் மாவு சேர்த்து செய்வது தான். வாங்க, இப்போது குக்கரில் சாக்லேட் ப்ரவுனி செய்வது என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக பார்க்கலாம். 

Also Read: சாக்லேட் கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

தேங்காய் மாவு - 1/2 கப்

கொகொ பவுடர் - 1/2 கப்

நெய் அல்லது வெண்ணெய் - 1/2 கப் (உருகியது)

முட்டை - 3

தேன் - 3/4 கப்

வெண்ணிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்

டார்க் சாக்லேட் - 1/2 கப் (உருகியது)

சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், கொகொ பவுடர், தேங்காய் மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லா, தேன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

இப்போது டார்க் சாக்லேட், வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு, முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி கட்டியில்லாமல், அடித்துக் கொள்ளவும்.

Also Read: மாம்பழ அல்வா செய்வது எப்படி?

வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இப்போது, இதை கேக் பேனில் ஊற்றி நன்றாக பரப்பி, அதன் மீது சாக்கோ சிப்ஸை தூவிவிடுங்கள்.

அதற்கு முன் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதன் நடுவில் ஸ்டாண்ட் ஒன்றை வைத்து குக்கரிய மூடி விசில் போடாமல் 3 நிமிடங்கள் சூடேற்றவும்.

பின்னர், மூடியை திறந்து கேக் பேனை அந்த ஸ்டாண்டின் மீது வைத்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 20-25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். 

Also Read: மாம்பழ கேக் செய்வது எப்படி?

இப்போது கேக் பேனை எடுத்து ஒரு தட்டில் மெதுவாக கவிழ்த்து, ஆற வைத்து வெட்டி பரிமாறவும்.

அவ்வளவு தாங்க.. மென்மையான பஞ்சுபோன்ற தேங்காய் மாவு ப்ரவுனி 'Coconut Flour Brownies' ரெடி..! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம். 

Tags:

Coconut flour chocolate brownies, Coconut flour brownies in tamil, coconut flour brownies recipe in tamil, Ingredients for Coconut Flour Brownies, Eggless coconut flour brownies, How to make chocolate brownie with coconut flour


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்