Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

Coconut Flour Benefits in Tamil: தேங்காய் மாவும் அதன் அற்புத நன்மைகளும்..!

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 13:15 [IST]
Coconut Flour Benefits in Tamil: தேங்காய் மாவும் அதன் அற்புத நன்மைகளும்..!Representative Image.

Coconut Flour Benefits in Tamil: பொதுவாக தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே எண்ணில் அடங்கா நற்குணங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தேங்காய் மாவும் பல வழிகளில் நன்மை அளிக்கிறது. இதை பலரும் கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை. வாங்க, தேங்காய் மாவு என்றால் என்ன, அதன் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்..

தேங்காய் மாவு என்றால் என்ன?

தேங்காய் மாவு என்பது தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்தப்பிறகு கிடைக்கும் தேங்காய் சக்கையை உலரவிட்டு பொடியாக்கி தயாரிக்கப்படும் மாவு ஆகும். இது ஓட்ஸ், கோதுமை, மக்காச்சோளம் போன்ற மாவுகளை காட்டிலும் மிகவும் அடர்த்தியானது, கருமையானது. குறைந்த கொழுப்பு உள்ள மாவு என்பதால் மிதமான சுவை மற்றும் லேசான வாசனையை கொண்டிருக்கும். இந்த மாவை அறை வெப்பநிலையில் 6 மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கோதுமை மாவிற்கு சிறந்த மாற்று தேங்காய் மாவு. ஏனென்றால், 100% பசையம் இல்லாதது. இதுதான் இந்த மாவின் ஸ்பெஷாலிட்டியே. 

சரும ஆரோக்கியத்தை கெடுக்கும் 7 இயற்கை பொருட்கள்..!

தேங்காய் மாவின் அற்புத நன்மைகள்:

❖ தேங்காய் மாவு அதிக ஊட்டச்சத்து அடர்த்தி கொண்டதால் செரிமான பிரச்சனைகள் தடுத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்கள் தேங்காய் மாவு போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால், நல்ல பலன்களை பெறமுடியும்.

வித்தியாசமான சுவையில் சாக்லேட் ப்ரவுனி செய்யலாம் வாங்க...

❖ தேங்காய் மாவில் எல்-அஜுனைன் என்ற அமினோ அமிலம் உள்ள புரதங்கள் இருக்கின்றன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் கோதுமை மாவிற்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த இந்த தேங்காய் மாவை பயன்படுத்தினால் பல நன்மைகளை பெறலாம். 

யாரெல்லாம் உறுப்பு தானம் செய்யலாம்..

❖ சிறுகுடலை பாதித்து உணவு உறிஞ்சுவதை தடுத்து வயிற்றுப்பகுதியில் அசௌகரியம் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை உண்டாக்கும், செலியாக் நோய் அல்லது பசையம் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சிறந்தது. 

❖ அதுமட்டுமல்லாமல், நார்ச்சத்து நிறைந்த தேங்காய் மாவு சீரம், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுவதோடு, கல்லீரலில் கொழுப்பு உருவாக்கத்தை தடுக்கின்றன. 

வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்..

❖ தேங்காய் மாவில் உள்ள நார்ச்சத்து, உடலில் தண்ணீரிய உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் எடையை கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். 

Tags:

What is coconut flour in tamil, Health benefits of coconut flour in tamil, Coconut powder benefits in tamil, Coconut flour uses in tamil, Coconut flour benefits in tamil, Benefits of coconut flour in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்