Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

4 மாத குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறை போக்குவது எப்படி?

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 14:30 [IST]
4 மாத குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறை போக்குவது எப்படி?Representative Image.

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வளரும் வரை பல உடல் சார்ந்த பிரச்சனைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அதிலும் முக்கியமாக வயிறு சம்பந்த உபாதைகள் அதிகமாக இருக்கும். ஏனென்றால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவர்களின் வயிறு தான் முதலில் பாதிக்கப்படும். குறிப்பாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்றவற்றால் குழந்தைகள் மிகவும் அவதிப்படுவார்கள். 

இதற்காக தனியாக மருத்துவரை சந்தித்து அறிவுரை பெற வேண்டும் என்பதும் அவசியம் தான். இருப்பினும் மற்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை வீட்டு வைத்தியத்தின் மூலமே போக்கிவிட முடியும். பேசும் குழந்தையாக இருந்தால் வாயை திறந்து சொல்லும். ஆனால், பச்சிளம் குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. அவர்கள் தங்கள் அழுகையின் மூலம் வெளிப்படுத்துவார். அதை வைத்து அம்மாக்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளுக்கு கொசு கடித்து வீங்கிப்போய் இருக்கா? 

ஆய்வுகளின் படி, 4 மாதங்களுக்கு குறைவாக உள்ள குழந்தைகளில் 50% பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுமாம். அதாவது இதை நெஞ்சு எரிச்சல் என்றும் சொல்வார்கள். இப்போது பச்சிளம் குழந்தைகளை தாக்கும் அஜீரண கோளாறை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கீழ்க்காணும் அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடித்து விடலாம். 

பால் குடிக்கும் நேரங்களில் முதுகை வளைத்தபடி இருப்பது

அடிக்கடி விக்கல் ஏற்படுவது

தொண்டையில் அடைப்பு ஏற்படுவது

மூச்சு விடுவதில் சிரமம்

பால் குடிக்க அடம்பிடிப்பது

குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குளியல் பொடி..

வீட்டு வைத்தியங்கள்:

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பார்கள். ஆனால், அவை அந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இதை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கலாம். 

இஞ்சி, சோம்பு இரண்டையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் பறந்துபோய் விடும். இதை சிறுவர்களுக்கும் கொடுக்கலாம். 

நடக்கும் குழந்தையாக இருந்தால் இஞ்சி மிட்டாய் கொடுக்கலாம். இதுவும் அஜீரணத்தை போக்குவதில் சிறந்த மருந்து. 

உங்க குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமா? 

பெப்பர் மிண்ட் ஆயிலை சிறிதளவு காட்டன் துணியில் தேய்த்து குழந்தை தூங்கும் தொட்டில் சுற்றிலும் வைத்துவிடுங்கள். இதை குழந்தைகள் சுவாக்கும் போது அவர்களின் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சிறிதளவு கலந்து குழந்தையின் அடிவயிற்றில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்