Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உயிருக்கு ஆபத்தான மலேரியா நோயில் இருந்து எப்படி விடுபடுவது? | Malaria Symptoms in Tamil

Priyanka Hochumin Updated:
உயிருக்கு ஆபத்தான மலேரியா நோயில் இருந்து எப்படி விடுபடுவது? | Malaria Symptoms in TamilRepresentative Image.

உலகம் முழுவதும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் மலேரியா நோயால் இந்த உலகின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பின்னர் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பால் மலேரியா நோய் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றளவும் மலேரியா தொற்று இருந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 2040 ஆம் ஆண்டுக்குள் மலேரியா என்னும் நோய் இல்லாத உலகம் படைக்க உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதனால் தற்போது 30% வரை மலேரியா நோய் தொற்று குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான மலேரியா நோயில் இருந்து எப்படி விடுபடுவது? | Malaria Symptoms in TamilRepresentative Image

மலேரியா அறிகுறிகள்

மலேரியா தொற்று கொசுக்களால் பரபரப்படும் கொடிய நோயாகும். அதற்கு சரியான சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்பு கூட நேரிடும். எனவே, மலேரியா நோயின் அறிகுறிகளைத் தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். ஒருவேளை மலேரியா தொற்று ஏற்பட்டாலும் கூட கவலைப் பட வேண்டாம், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

1. முதலில் காய்ச்சல் இருப்பது போல வெப்பநிலை அதிகரிக்கும்.

2. பின்னர் இயல்பு நிலையைக் காட்டிலும் வியர்வை அதிகமாக இருக்கும்.

3. சில நேரங்களில் உடல் குளிர்ச்சியாக இருப்பது போல உணர்வு ஏற்படும்.

4. தலைவலி மற்றும் குழப்பமான மனநிலையை உண்டாகும்.

5. மிகவும் சோர்வாகவும், தூக்க கலக்கமாகவும் உணர்வீர்கள். 

6. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கக்கூடும்.

7. பசியின்மை மற்றும் தசை வலி ஏற்படலாம்.

8. கண்களில் உள்ள வெள்ளை பகுதி அல்லது தோல் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.

9. தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும்.

உயிருக்கு ஆபத்தான மலேரியா நோயில் இருந்து எப்படி விடுபடுவது? | Malaria Symptoms in TamilRepresentative Image

மலேரியாவில் இருந்து விடுபட

மலேரியா நோய் மழைக்காலங்களில் தான் அதிகமாகக் காணப்படும். அந்த சமயத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீடுகளில் கொசு வருவதை தடுக்க ஏற்பாடுகள் செய்துக்கொள்ளவும். உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல மழைக் காலங்களில் தண்ணீரில் விளையாடுவதை தவிர்ப்பது நல்லது. உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இவற்றையும் தாண்டி மலேரியா வந்தால் மருத்துவமனையை நாடி சிகிச்சைப் பெற்று காத்துக்கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்