Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

மங்குஸ்தான் பழத்தில் இப்படி ஒரு நன்மை இருக்குதா? இது தெரியாம போச்சே! | Mangosteen Fruit Benefits in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மங்குஸ்தான் பழத்தில் இப்படி ஒரு நன்மை இருக்குதா? இது தெரியாம போச்சே! | Mangosteen Fruit Benefits in TamilRepresentative Image.

பொதுவாக பழங்கள் என்றாலே ஆப்பிள், மாதுளை, திராட்சை, வாழைப்பழம், ஆரஞ்சு, பலா, மாம்பழம் போன்றவை தான் நினைவுக்கு வரும். காரணம் இப்பழங்கள் அதிகளவில் கிடைக்கக்கூடியவை மற்றும் விலையும் மலிவுவானவை. அதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிட்டு வருகின்றோம். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் நிறைய பழ வகைகள் இருக்கின்றன. இந்த பழங்கள் எளிதில் கிடைக்காது மற்றும் விலையும் சற்று அதிகமாக இருக்கும். அதனால் தான் இவற்றின் நன்மைகள் நமக்கு தெரியாமலே போய்விடுகின்றன. அப்படி நாம் அதிகம் சுவைக்காத பழங்களில் ஒன்று தான் 'மங்குஸ்தான்' பழம்.

ஆரம்பத்தில் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிகம் விளைவிக்கப்பட்டு வந்த இந்த பழம், இப்போது தமிழகத்திலும் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலைப் பகுதிகளில் விளையக் கூடிய இந்த பழம் பார்ப்பதற்கு மாதுளை பழத்தை போன்றே இருக்கும். அதாவது, பழத்தின் தோல் பகுதி தடினமாக இருக்கும், அதை பிளந்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். அவை இளஞ்சிவப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். குறிப்பாக இப்பழம் குற்றாலத்தில் அதிகமாக கிடைக்கின்றன. எனவே, குற்றாலம் போனால் இந்த பழத்தை வாங்க மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த பழத்தில் அவ்வளவு எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. சரி அவற்றின் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மங்குஸ்தான் பழத்தில் இப்படி ஒரு நன்மை இருக்குதா? இது தெரியாம போச்சே! | Mangosteen Fruit Benefits in TamilRepresentative Image

மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் என்னென்ன?

குறிப்பாக, எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த பழத்தை தினம் ஒரு முறை என்ற வீதத்தில் மூன்று வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எட்டு கிலோ வரை குறைக்க முடியும்.

இந்த பழத்தில் இருக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. மேலும், இதயத்தை வலுப்படுத்தைவும் உதவுகிறது.

காசநோய் இருப்பவர்கள் தொடர்ந்து மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் வெகுவாக குறையும். ஏனென்றால், இதில் இருக்கும் சான்தொன்ஸ் என்னும் முக்கியமான திரவம் காசநோய் குணமாக்கும் தன்மை கொண்டது. 

கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால், சிலருக்கு கழுத்து வலி, தலை வலியால் அவதிக்குள்ளாவார்கள். அப்படிப்பட்டவர்கள், மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் பறந்துபோய்விடும். அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். அந்த சமயத்தில் இந்த பழத்தை அல்லது இதன் ஜூஸை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் குணமாகும். மூலநோய் இருப்பவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம், விரைவில் சரியாகும்.

மது பழக்கம் இருப்பவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை குறைக்க, மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவது நல்லது. அல்லது பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் டீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப் போக்கு குறையும்.

இந்த பழத்தில் மட்டும் மருத்துவ குணம் இல்லை. அதன் தோலிலும் மருத்துவம் குணம் உள்ளது. அதாவது, இதன் தோலை வெயிலில் உலர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக இருப்பீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்