Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Palm Jaggery Benefits in Tamil: பனை வெல்லத்தோட மருத்துவ குணம் தெரிஞ்சா சர்க்கரையை தொடவே மாட்டீங்க…!!!

Nandhinipriya Ganeshan May 17, 2022 & 20:00 [IST]
Palm Jaggery Benefits in Tamil: பனை வெல்லத்தோட மருத்துவ குணம் தெரிஞ்சா சர்க்கரையை தொடவே மாட்டீங்க…!!!Representative Image.

Palm Jaggery Benefits in Tamil: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் பனை மரங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். இதன் ஒவ்வொரு பாகமும் இன்றியமையாததாகவே உள்ளது. அதாவது, பனை ஓலை, பதனீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனைவெல்லம் என இதன் பாகம் ஒன்று கூட வீண் என்று சொல்ல முடியாது. அதிலும் இதிலிருந்து தயார் செய்யப்படும் பனைவெல்லம் உடலுக்கு அவ்வளவு நன்மைகளை தருகிறது.

இதன் மருத்துவத்த குணத்தை அறியாமலே அக்காலங்களில் இதை பயன்படுத்தி வந்தனர் மக்கள். அதனால் தான் அவர்கள் இன்னமும் இரும்பு போல் திடமாக இருக்கிறார்கள். வெள்ளைச் சர்க்கரையை எல்லாவற்றிலும் பயன்படுத்தும் நம் தலைமுறை இப்பவே உடலில் பல்லாயிரம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், இந்த பனை வெல்லத்தின் நன்மைகளை படித்தும் தெரிந்தும் பலரும் இதை தவிர்ப்பது ஏன் என்று தான் புரியவில்லை. இப்போது பனை வெல்லத்தின் மருத்துவ குணங்களையும், அது எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதையும் விரிவாக பார்க்கலாம். இனிமேலாவது இதை பயன்படுத்த தொடங்குவோம்...

பனை வெல்லம் | Panai Vellam

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பத நீரை நன்றாக காய்ச்சி அதிலிருந்து கிடைப்பதே பனை வெல்லம் (palm jaggery in tamil). இதை கருப்பட்டி என்று அழைப்பதுண்டு. காய்ச்சிய பத நீரை அச்சுகளில் ஊற்ரி நன்கு காய வைத்து இயற்கையான முறையில் தயார் செய்யப்படுவதே பனை வெல்லம். உருண்டை வெல்லத்திற்கு கருப்பட்டிக்கும் என்ன வித்தியாசம் என்றால் உருண்டை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம், இது கரும்பில் இருந்து தயார் செய்யப்படுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. சிலருக்கு இதை அப்படியே சாப்பிடவும் ரொம்ப பிடிக்கும். நான் ஒரு டிப்ஸ் தருகிறேன் இத ட்ரை பண்ணி பாருங்க.. ஒரு துண்டு பனை வெல்லத்தையும் தேங்காயையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. ஒரு வித்தியாசமான சுவையாக இருக்கும். தினமும் பனை வெல்லத்தை சிறிதளவு சேர்த்து வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்களே பாருங்க...

தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா...? 

பனை வெல்லத்தின் அற்புதமான நன்மைகள் இதோ!

சளி, இருமல் - சிறிதளவு பனை வெல்லத்தோடு, இஞ்சி அல்லது சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க சளி, இருமல் பறந்து போகும். அதோடு இது ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் அவஸ்தைப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி -  கருப்பட்டியில் இரும்பு சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளதால் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் அடிக்கடி நோய்வாய் படுவது குறையும் மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பெண்களுக்கு - பெண்களுக்கு ரொம்ப நல்லது. பருவம் அடைந்த பெண் பிள்ளைகளுக்கு வாரத்திற்கு இருமுறை உளுந்து மற்றும் பனை வெல்லத்தை சேர்த்து களி செய்து கொடுத்தால் கர்ப்பபை பலம் பெறுவதுடன் இடுப்பு எலும்புகளும் உறுதியாகும். மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளும் நீங்கும்.

செரிமானத்திற்கு - பல வெல்லத்தை தினமும் சேர்த்து வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெற்று வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மூட்டி வலி பிரச்சனை - பனை வெல்லத்தின் கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக்குகிறது. எனவே பனை வெல்லத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், மூட்டு வலி மற்றும் பிற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.

உடலுக்கு குளிர்ச்சி - பனை வெல்லத்தில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை இருப்பதால், உடலில் உருவாகும் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

பசியின்மைக்கு மருந்து - சீரகத்திய நன்றாக வறுத்து அத்துடன் சுக்கு, பனைவெல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர பசியின்மை நீங்கும்.

தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தன நன்மைகளா…?

டீ, காபியில் பனை வெல்லம்:

வெள்ளை சர்க்கரையில் வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்தை உறுஞ்சி உடலுக்கு தேவையான பலத்தை நீக்குகிறது. எனவே, இதை தடுக்க நாம் தினமும் குடிக்கும் டீ அல்லது காபி அல்லது பாலில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை சேர்த்து குடித்து வர உடலுக்கு நல்ல வலிமை கிடைக்கப்பதோடு, எண்ணற்ற பலன்களும் கிடைக்கும். ஆனால், அளவிற்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எதிலும் ஆரோக்கியத்தோடு ஆபத்தும் கூடவே (palm jaggery benefits and side effects) வரும். எனவே, அளவோடு எடுத்துக் கொண்டு பயனடையுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்