Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இத மட்டும் பண்ணுங்க ஏழு நாள் ஆனாலும் பூ வாடவே வாடாது...

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 20:00 [IST]
இத மட்டும் பண்ணுங்க ஏழு நாள் ஆனாலும் பூ வாடவே வாடாது...Representative Image.

பெண்களுக்கு மிகவும் பிடித்த பூக்களில் ஒன்று மல்லிகை. இதன் வாசனையே தனி என்று தான் சொல்ல வேண்டும். மல்லிகை சீசனில் எவ்வளவு மலிவு விலையில் கிடைக்கிறதோ, சீசன் முடிந்ததும் அப்படியே எதிர்மறையாக விற்பனை செய்வார்கள். ஏன் சில சமயங்களில் ஒரு முலம் பூ கேட்டாலும் ஒரு மாதிரி பார்ப்பார்கள் பூக்கடைக்காரர்கள். அதுவும் இந்த விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் வந்துவிட்டால் பூக்களின் விலை தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்யப்படும். 

இதானலையே, வீட்டில் பெண்கள் இரண்டு நாட்கள் முன்பே பூக்களை வாங்கி கட்டி பிரிட்ஜில் வைத்து விடுவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பூ வாடி, மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இதை கல்யாணத்திற்கு வைத்து கொண்டு போக முடியாத சூழ்நிலையில் கடையில் 200 ரூபாய் கொடுத்து வாங்கி தலையில் வைத்துக்கொண்டு போவார்கள். பொதுவாக, பூக்களை 7 நாட்கள் வரை வாடாமல் புதியது போல் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இதை மட்டும் முயற்சி செய்து பாருங்கள், நீங்களே ஆச்சர்யப்பட்டு போய்டுவீங்க.

Flowers Thailand

முதலில் 1/2 கிலோ பூவை கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். அங்கு அவர்கள் பாலித்தீன் பையில் தான் போட்டு தருவார்கள். அதை வீட்டிற்கு வந்தவுடன் கவரில் இருந்து பூவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் தெளித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு, அதை தரையில் போட்டு கட்டாமல் ஒரு தட்டத்தின் மீது போட்டு நூலில் கட்டிக்கொள்ளுங்கள். மொக்காக இருக்கும்போதே கட்டி தண்ணீர் தெளித்து கவரில் போட்டு முடிச்சி போட்டு அதை அழுத்தினால் உள்ளே இருக்கும் காற்று வந்துவிடும்.  இப்படி செய்தால் 15 நாட்களே ஆனாலும் பூ வாடாமலும கெட்டுப்போகாமலும் இருக்கும். 

Jasmine Pearl Tea : HOJO TEA

முல்லை பூவாக இருந்தால் அதை பூக்கும் முன்பே கட்டிவிட வேண்டும். வெடித்துவிட்டால் கட்டுவது சிரமம், பூவும் வீணாகிவிடும். பூவை கட்டி ஒரு கவரில் போட்டு முடிச்சி போட்டு அதை அழுத்தினால் உள்ளே இருக்கும் காற்றி வெளியேறிவிடும். 

இப்போது இந்த இரண்டு கவரையும் சேர்த்து ஒரு சம்படத்தில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டுவைத்தால், கரண்ட் இல்லாத நேரத்தில் குளிர்ச்சி இல்லாமல் விரைவில் வாடி விடும். இதை முயற்சித்து பாருங்கள் 10 ஆனாலும் கூட பூ வாடாமல் இருக்கும். 

simple&easy trick to string jasmine flower closely/how to tie jasmine  garland/malligai poo kattuthal - YouTube

வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், ஒரு அகலமான பேசனில் தண்ணீரை ஊற்றி அதன் மேலே வாழை இலையை மிதக்க வைத்து, அதன் மேலே கட்டிய பூவை வைத்து, பூவுக்கு மேலே காட்டன் துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து மூடி, அதன் மேல் ஒரு சில்வர் தட்டை, கவிழ்த்து வைத்தால் இந்த பூவும் 10 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். அந்த துணி காய்ந்த பிறகு அதை மீண்டும் மீண்டும் நனைத்து வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்