Mon ,Sep 26, 2022

Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 20: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் ஏற்படும் உடல் & மன மாற்றங்கள் என்னென்ன?

Nandhinipriya Ganeshan September 20, 2022 & 17:45 [IST]
Representative Image. Representative Image.

Second Trimester of Pregnancy in Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


கர்ப்பத்தின் நான்காவது மாதம் என்பது கர்ப்பத்தின் 16 வது வாரத்தின் தொடக்கமாகும். இந்த மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.


உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

இந்த மாதம், உங்கள் ஆடைகள் இறுக்கமாக இருப்பதை உணருவீர்கள். 16 வது வாரத்தில் உங்கள் இடுப்பு பகுதி மறைந்துவிடும். 17 வது வாரத்தில், உங்கள் கருப்பையின் மேற்பகுதி உங்கள் அந்தரங்க எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையில் பாதியாக இருக்கும். எனவே, இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்து, சில தளர்வான ஆடைகளை அணிய இப்போதிலிருந்தே முயற்சி செய்யுங்கள்.

இந்த மாதத்தில் உங்கள் கருப்பை அடிவயிற்றில் உயரத் தொடங்கும், இதனால் அடிக்கடி சிறுநீர் வரும். மேலும், உங்கள் குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க உங்கள் இதயம் இப்போது வழக்கத்தை விட 20% அதிக இரத்தத்தை செலுத்தும்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உங்களுக்கு முடி உதிர்வு ஏற்படலாம். ஏற்கனவே ட்ரை ஸ்கேல்ப்பை உடையவர்களுக்கு மேலும் வறண்டு போகலாம், எண்ணெய் பசையுள்ள கூந்தலாக இருந்தால் மேலும் எண்ணெய் பசையாக மாறலாம்.

உங்கள் தோல் நிறம் அல்லது அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படும். உங்கள் தோலின் கீழே உள்ள சில சிறிய இரத்த நாளங்கள் (நரம்புகள்) வீங்கி வெளியில் தெரியும். இது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஒரு நல்ல கன்சீலரைப் பயன்படுத்துவதன் மூலம் இதன் தன்மையை குறைக்கலாம். ஆனால் குழந்தை பிறந்த பிறகு, இந்த கோடுகள் மங்கி முற்றிலும் மறைந்துவிடும்.

உடலுக்குள்ளே ஏற்படும் மாற்றங்கள்:

கர்ப்பத்தின் 4வது மாதத்தில் வெளியில் இருப்பதைப் போலவே உங்கள் உடலுக்குள்ளும் அதிக மாற்றங்கள் நிகழ்கின்றன.

நெஞ்செரிச்சல் இந்த மாதத்தில் ஒரு புதிய அறிகுறியாகும். உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே வருவதால் மார்பு மற்றும் நெஞ்சுப்பகுதியில் ஒரு மாதிரியான எரிச்சல் ஏற்படும். பொதுவாக, படுத்திருக்கும் போது இந்த அமிலங்கள் அதிகமாக மேலே வருவதால், நெஞ்செரிச்சல் அதிகமாக காணப்படும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம்.

கருப்பை விரிவடையும் போது, ​​உங்கள் முதுகு, தொடைகள், வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலியை உணருவீர்கள். அடுத்த 5 மாதங்களுக்கு இந்த வலி தொடரலாம்.

ஹார்மோன் மாற்றங்களால் உங்க மார்பகங்களின் அளவு அதிகரிக்கும். சில சமயங்களில் காம்பு பகுதியில் வலியை ஏற்படத்தலாம். கர்ப்பக் காலத்து அனைத்து கர்ப்பிணிகளும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இது.

சில பெண்களுக்கு உடலில் அதிக அளவு ஹார்மோன்கள் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது.

குழந்தை வளரும்போது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக அதிக சிறுநீர் கழித்தல் மற்றும் கசிவு ஏற்படும்.

சில பெண்கள் கைகளில் கூச்ச உணர்வு அல்லது கார்பல் டன்னல் நோய்க்குறியை அனுபவிக்கிறார்கள், இது முக்கியமாக மணிக்கட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்தால் ஏற்படுகிறது. இது பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.

உடலில் இரத்த அளவு அதிகரிப்பதன் காரணமாக, கால்களில் உள்ள நரம்புகள் பெரிதாகி, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை ஏற்படுத்துகிறது. பிரசவத்திற்குப் பிறகு இதுவும் மறைந்துவிடும்.

மேலும் இந்த மாதத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக யோனி வெளியேற்றம் (vaginal discharge) அதிகரிப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.

4 வது மாதத்தில் வயிற்றின் அளவு:

கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் உங்களுடைய வயிறு ஒரு பாகற்காய் அளவு தான் இருக்கும்.

இது ஒரு உற்சாகமான மாதம், ஏனென்றால் முதல் முறையாக குழந்தையின் அசைவை உங்களால் உணர முடியும்! இது உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை முழுமையாக வளர்ந்திருக்கும். ஆனால், எல்லா உறுப்புகளும் சின்ன சின்னதாக இருக்கும்.

Tag: 4 Month Pregnancy In Tamil | 16 Weeks Pregnant In Tamil | Second Trimester Of Pregnancy In Tamil | Body Changes In 4th Month Of Pregnancy | 4 Month Pregnancy Belly Size | Physical Changes In 4 Month Pregnancy | Body Changes In 4 Month Of Pregnancy | Belly Size At 4 Months Pregnant | Stomach Size In 4th Month Of Pregnancy | 4 Months Pregnant Belly Size Pictures | Body Changes At 4th Month Pregnancy.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts