Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறைந்த குயின் எலிசபெத்தின் வியக்கும் வைக்கும் வாழ்க்கை வரலாறு….

Gowthami Subramani September 09, 2022 & 11:40 [IST]
மறைந்த குயின் எலிசபெத்தின் வியக்கும் வைக்கும் வாழ்க்கை வரலாறு….Representative Image.

பிரிட்டனின் நீண்ட கால மகாராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத் ராணி ஆவார்.

இரண்டாம் எலிசபெத் ராணி பிறப்பு

இங்கிலாந்து மக்களால் அன்போடு அரவணைக்கப்படும் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி அவர்கள் கடந்த 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாயாரின் பெயர் முறையே ஆறாம் ஜார்ஜ் மற்றும் எலிசபெத் ஆகும். இதனால் தான் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.

பிரிட்டனின் ஆட்சி

இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா மேரி பிறந்த சமயத்தில் பிரிட்டனின் மன்னராக அவரது தாத்தாவான ஜார்ஜ் – V இருந்தார். இவர் கடந்த 1936 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இதனையடுத்து, எட்வர்ட் VIII மன்னரானார்.

இவருக்கு அடுத்த படியாக, பிரிட்டன் மன்னரின் பதவிக்கு ரேஸில் எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் VI இருந்தார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது நபராக எலிசபெத் இருந்தார்.

எலிசபெத் ராணியாக முடியாது

இவ்வாறு இருக்கும் சமயத்தில், எலிசபெத் ராணியாக பொறுப்பேற்க முடியாது என்ற பேச்சுக்கள் அதிகமாக எழுந்தது. அதாவது, மன்னராக இருக்கும் எட்வர்டு VIII க்கு குழந்தைகள் பிறக்கும் எனவும், இவரது வாரிசுகள் அடுத்த மன்னராவார்கள் எனவும் பேச்சு இருந்தது. இந்த நிலையில் மன்னர் எட்வர்ட் VIII பட்டத்தைத் துறந்து அடுத்த பட்டத்து மன்னராக எலிசபெத்தின் தந்தையான ஜார்ஜ் VI மன்னராக முடி சூடினார்.

இதனைத் தொடர்ந்து, 1936 ஆம் ஆண்டு முதல் பட்டத்து இளவரசியாக எலிசபெத் பெற்றார். அந்த சமயத்தில் அவரது வயது 10 ஆக இருந்தது. பிறகு, 1952 ஆம் ஆண்டில் தந்தை ஜார்ஜ் VI-ன் மறைவிற்குப் பின்னர், எலிசபெத் 2 மகாராணியாக பட்டம் சூடினார். 1952 ஆம் ஆண்டு முதல் 2022 வரை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை மகாராணியாக ஆட்சி செய்தார். இரண்டாம் எலிசபெத் அவர்களின் புனைப்பெயர் “லிலிபெட்” ஆகும்.

இரண்டாம் எலிசபெத் கல்வி

இவர் மகாராணியாக இருந்த சமயத்தில் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். ஆசிரியர்கள் வீட்டுக்கே வரவழைக்கப்பட்டு கல்வி போதித்தனர். அனைத்து வசதிகளும் அரண்மனையிலேயே இருந்தது. அந்த காலத்தில், மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே ஆட்டிப் படைத்தவர் போலும்.

எலிசபெத்தின் கிரீடம் யாருக்கு? 

இரண்டாம் எலிசபெத் திருமண வாழ்க்கை

இவர் தனது 8 ஆவது வயதில் முதன் முறையாக தனது கணவரைச் சந்தித்தார். பிலிப் அவர்கள், கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசாக இருந்தவர்.

அதனைத் தொடர்ந்து எலிசபெத் தனது 13 ஆவது வயதில் பிலிப்பிடம் காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதல் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர். பிறகு, 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. இது ஒரு சர்வதேச நிகழ்வாக இருந்தது.

எலிசபெத் மகாராணியின் குழந்தைகள்

எலிசபெத் மற்றும் பிலிப்பிற்குத் திருமணமான ஒரு வருடம் கழித்து இளவரசராக சார்லஸ் பிறந்தார். அதன் பின், ஆண்ட்ரூ, எட்வர்டு என்ற மகன்கள் பிறந்தனர்.

தற்போது, இவரின் மறைவை அடுத்து பிரிட்டன் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற வேறு மகாராணி எங்களுக்கு எப்போதும் கிடைக்க மாட்டார்கள் என இங்கிலாந்து மக்கள் புகழாரம் செய்து எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்