Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Richest South Indian Actress 2022: அடேங்கப்பா… வாயடைத்து போக வைக்கும் தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு… யார் டாப் தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 18:30 [IST]
Richest South Indian Actress 2022: அடேங்கப்பா… வாயடைத்து போக வைக்கும் தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு… யார் டாப் தெரியுமா?Representative Image.

Richest South Indian Actress 2022: இந்திய சினிமாவை பொறுத்தவரை பாலிவுட் நடிகர்கள் மட்டுமல்ல, மாலிவுட், டோலிவுட், மற்றும் கோலிவுட்டின் பல தென்னிந்திய நடிகைகளும் கோடியில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களுடைய படங்கள் உலகளவில் சூப்பர் ஹிட்டானதோடு, பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை வாரி குவித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில், இந்திய சினிமாவில் உள்ள கோடீஸ்வர நடிகைகள் குறித்த பட்டியலை பார்ப்போம்.

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயினாக ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. “கீதா கோவிந்தம்” என்ற ஒரே படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர். ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தெலுங்கில் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது விஜய் நடித்துவரும் “வாரிசு” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவருகிறார். இவர் ஒரு படத்திற்கு 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில், இவருடைய சொத்து மதிப்பு சுமார் 28 கோடி என்று சொல்லப்படுகிறது.

பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான “முகமூடி” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு புதிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் “வைகுந்தபுரம்” என்ற  படத்தில் நடித்து, “புட்ட பொம்மா புட்ட பொம்ம, நானு சுட்டுகுண்டிவே..” என்ற பாட்டில் அழகாக ஒரு குட்டி பாவாடையில் மெளுகு டாலு போல டான்ஸ் ஆடி மாஸ் ஹீரோயினியாக உருவெடுத்தார் பூஜா. அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் ஜோடியாக “பீஸ்ட்” படத்தில் அடியெடுத்து வைத்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் தான். இவருடைய சொத்து மதிப்பு 50 கோடி என்றும் கூறப்படுகிறது.

சமந்தா

தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமான சமந்தா, இப்போது சினிமா உலகில் மாஸ் ஹீரோயினாக திகழ்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலக முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். அதுவும், சென்ற ஆண்டு வெளியான “புஷ்பா” படத்தில் “ஓ சொல்றியா மாமா…” என்ற பாடலின் மூலம் அனைத்து இளைஞர்களின் நெஞ்சங்களிலும் குடிக்கொண்டுள்ளார். சொல்லப் போனால் இந்த பாட்டில் அவர் போட்ட குத்தாட்டத்திற்கே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஒரு படத்துக்கு 3-5 கோடி வரை சம்பளம் வாங்கும் இவருடைய சொத்து மதிப்பு 89 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

அனுஷ்கா ஷெட்டி

அருந்ததீ” படத்தின் மூலம் அதிகம் பேசப்பட்டவர் தான் அனுஷ்கா ஷெட்டி. அதன்பின், “பாகுபலி” திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழின் உச்சத்திற்கு சென்றவர். 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் ஹீரோயினியாக நடித்து பெரிய அளவில் உயர்ந்தார். அனுஷ்கா ஒரு படத்திற்கு 4-5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ஆகும்.

தமன்னா

2006 ஆம் ஆண்டு “கேடி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பின் தமிழ் திரையுலகில் தமன்னாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை தந்தது பாலாஜி சக்திவேலின் “கல்லூரி”. அதைத் தொடர்ந்து, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கதைநாயகியாக உயர்ந்துள்ளார். அடுத்தது, பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பேசப்பட்டார் தமன்னா. 17 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் இவரது சொத்து மதிப்பு 110 கோடி என்று கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருபவர் தான் நம்ம நயன்தாரா (South’s Richest Actress). தமிழ் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா 2003 ஆம் ஆண்டு “மனசினக்கரே” என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதேபோல், 2005 ஆம் ஆண்டு “ஐயா” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய திறமையான நடிப்பால், தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இப்படி தனி ஆளாக உயர்ந்து இப்போது ஒரு படத்திற்கு மட்டும் 8-10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். கடந்த 19 ஆண்டுகளாக திரையுலகில் உள்ள இவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் 165 கோடி (nayanthara net worth) என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளின் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர் தான்.

Tags:

Richest South Indian Actress 2022 | South’s Richest Actress | Richest south indian actress net worth | South indian actress net worth


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்