Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பாலியல் அடிமைத்தனத்திற்கான அறிகுறிகள்... | Sex Addiction Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பாலியல் அடிமைத்தனத்திற்கான அறிகுறிகள்... | Sex Addiction Symptoms in TamilRepresentative Image.

பாலியல் அடிமைத்தனம் என்பது பாலின வேறுபாடின்றி அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. உச்ச இன்பத்தை கொடுத்தாலும் வாழ்க்கை நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தாதவரை கவலையில்லை. ஆனால், அதற்காகவே அடிமையாகிவிட்டால் மனரீதியாகவும், ஆரோக்கியம் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், திருமணத்திற்கு பிறகு உறவுக்குள் இருக்கும் ஒரு பிணைப்பை அழித்துவிடும். அந்தவகையில், உங்க கணவரோ, மனைவியோ செக்ஸுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்துக் கொள்ள முடியும்.

பாலியல் அடிமைத்தனத்திற்கான அறிகுறிகள்... | Sex Addiction Symptoms in TamilRepresentative Image

அறிகுறிகள்?

உங்க துணை அடிக்கடி சுயஇன்பம் செய்வது, அடிக்கடி ஆபாச படங்கள் பார்ப்பது, திருமணத்தை மீறிய உறவு உள்ளிட்ட பாலியல் ரீதியான விஷயங்களில் மூழ்கியிருந்தால் அவர் செக்ஸுக்கு அடியாகி உள்ளார் என்பதற்கான முதல் அறிகுறி.

பாலியல்ரீதியான விஷயங்களில் உங்களிடம் பொய் கூறுவதும், அது குறித்து மறைக்க முயற்சி செய்வதும் கூட பாலியல் அடிமைத்தனத்திற்கான அறிகுறிதான். அடிக்கடி கோபப்படுதல், 

உங்க துணை செக்ஸ் விஷயங்களில் காட்டும் அதிக ஈடுபாட்டால் பாலியல் உறவுக்குள் பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படி பிரச்சனை வந்தாலும், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர் முழுமையாக அடிமையாகிவிட்டார் என்பதே உண்மை.

பாலியல் அடிமைத்தனத்திற்கான அறிகுறிகள்... | Sex Addiction Symptoms in TamilRepresentative Image

உங்க துணை பாலியல் அடிமைத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், எப்போதும் ஒரே மாதிரி திருப்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக உறவுகொள்ளும்போது எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். ரொம்ப உணர்ச்சிகரமாக நடந்துக்கொள்வார்கள். 

குடும்பம், அலுவலகம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொறுப்பு இல்லாமல் அதை தவிர்ப்பார், ஆனால் பாலியல்ரீதியான விஷயங்களில் மட்டும் அதிக ஈர்ப்புடன் இருப்பார். இதுவும் செக்ஸுக்கு அடிமைக்கான அறிகுறிதான். 

ஆனால், பாலியல் உறவுக்கு அடிமையாகியுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது, எனவே உங்க துணையின் பாலியல் நடவடிக்கைகளில் வித்தியாசம் ஆரம்பமாகும்போதே அவர்களிடம் பேசி பாருங்கள். உங்களால் கையாள முடியாவிட்டால் அவருக்கு மருத்துவ ஆலோசனை தேவை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்