Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி? | How to make Nuts Kulfi at home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி? | How to make Nuts Kulfi at homeRepresentative Image.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே அனைவரும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களான இளநீர், பழ வகை ஜூஸ் மற்றும் ஐஸ்கீரிம் எனச் சாப்பிடுவது வழக்கம். ஆனால் உடலுக்கு ஆரோக்கியமாகவும், நம் அனைவருக்கும் பிடித்தமாதிரியான ஒரு ரெசிபி அதுவும் வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும். அந்த மாதிரியான ஒரு ரெசிபி தான் இந்த நட்ஸ் குல்ஃபி எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்.

வீட்டிலேயே ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி? | How to make Nuts Kulfi at homeRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ நட்ஸ் பவுடர் – 1/4 கப்

✤ சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்

✤ ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

✤ பால் - 1/2 லிட்டர்

✤ குங்குமப்பூ - சிறிதளவு

✤ சர்க்கரை – 8 டேபிள்ஸ்பூன்

✤ குல்ஃபி எசன்ஸ் – சிறிதளவு

✤ சர்க்கரை இல்லாத கோவா- 100 கிராம்

வீட்டிலேயே ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி? | How to make Nuts Kulfi at homeRepresentative Image

செய்முறை

✤ முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, அக்ரூட், பிஸ்தா, சாரைப்பருப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் அல்லது நட்ஸ் பவுடர் எடுத்துக் கொள்ளவும்.

✤ ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பால் சேர்த்து அதில் சோள மாவு சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள பால் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும்.

வீட்டிலேயே ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி? | How to make Nuts Kulfi at homeRepresentative Image

✤ அதில் 400 கிராம் கோவா சேர்த்து நன்றாகக் கிளறவிட்டு, 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

✤ அதன் பின், அதில் பாலில் கலக்கிவைத்த சோள மாவைச் சேர்த்து, மிதமான தீயில் நன்றாக கிளறிவிடவும்.

✤ பால் நன்றாகக் கெட்டியான பின், அதில் அரைத்த நட்ஸ் அல்லது கடையில் வாங்கிய நட்ஸ் பவுடரை சேர்த்துக் கிளறவும். அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, அதில் குல்ஃபி எசன்ஸ் சேர்த்து ஆறவைக்கவும்.

✤ அதை 10லிருந்து 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் இனிப்பான ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்